தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர்களாக இருக்கும் பலரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஒரு சில நடிகர்களும் தற்போது பல முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு எப்போதும் சினிமா நடிகர்கள். நடிகைகள் மீது மோகம் இருக்கும். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களுக்கு ரசிகர் கூட்டங்கள் அலைமோதும். இந்நிலையில் தான் பிரபல கட்சி தலைவராகவும், சினிமாவில் நடிகராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது அவரின் படத்தில் நடித்த நடிகர் சந்தானம் பற்றி ஒரு தகவலை கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம்
உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸின் கீழ் பல படங்களை விநியோகித்து வந்தார். அதன் பிறகு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் அவர் மற்றும் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஒரு கல் ஒரு கண்ணாடி
உதயநிதி ஸ்டாலின் தான் முதலில் நடிக்கும் படத்தை சிறப்பாக தேர்ந்தெடுத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். காரணம் தான் ஒரு சினிமா, அரசியல் பின்புலத்தை கொண்டவராக இருந்தாலும் முதல் படத்திலேயே பெரிய பட்ஜெட் எதுவும் கொடுக்காமல், ஆக்ஷன் போன்ற கதைகளை தேர்வு செய்யாமல் நகைச்சுவை கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள தொடங்கினார்கள். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
மேலும் இந்த படம் வெற்றி அடைவதற்கு மற்றொரு காரணம் அதில் நகைச்சுவை நடிகராக நடித்த சந்தானம். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் படமாக எடுக்கப்பட்டது.
ஆனால் ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லாததால் இவ்வளவு பெரிய படத்தை மக்கள் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள் என்பதற்காக பல காட்சிகளை அதில் எடிட் செய்து அதன் பிறகு படத்தின் நீளத்தைக் குறைத்து வெளியிட்டோம்.
அந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கும் சந்தானத்துக்கும் இடையில் காதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் வைத்திருந்தோம். இந்தப் படத்தின் ஷூட்டிங்க்கு ஆண்ட்ரியா 25 நாள் நடித்திருந்தார். ஆனால் பல காட்சிகளை நீக்கியதால், சந்தானத்திற்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே உள்ள காதல் காட்சிகளையும் நீக்கி விட்டோம் என உதயநிதி கூறியிருக்கிறார்.