காமெடி காம்போவில் களம் இறங்கும் வைபவ்.. ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?  Chennai City Gangsters – Release Trailer

நடிகர் வைபவ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி கதை களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த மேயாத மான், ஆர் கே நகர் மாதிரியான திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் கூட மற்ற நடிகர்களுக்கு கிடைப்பது போல பெரிய பெரிய பட வாய்ப்புகள் வைபவிற்கு கிடைப்பதில்லை.

அதற்கு காரணம் அவர் கதையைத் தேர்ந்தெடுக்கும் முறையே என்று கூறப்படுகிறது. தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்த திரைப்படத்தில் ஒரு காமெடி காம்போவே களமிறங்கி இருக்கிறது என்று கூற வேண்டும்.

மொட்ட ராஜேந்திரன் ஆனந்தராஜ் இன்னும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். எனவே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதோ ஒரு பண பிரச்சனையில் இருக்கும் வைபவ் அதிலிருந்து தப்பிவதற்காக ஒரு வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார். அதை வைத்து தான் கதைக்களம் செல்கிறது. தற்சமயம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருக்கிறார்.