சந்தானம் மாதிரி காமெடி பேய் கதையில் இறங்கிய பிரபாஸ்… ராஜாசாப்… வெளியான ட்ரைலர்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படியாக அவர் நடித்து வரும் படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. சில படங்கள் பெரிதாக போவது கிடையாது இந்த நிலையில் தொடர்ந்து பிரபாஸுக்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் கூட அவர் நடித்த கல்கி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆயிரம் கோடியை தாண்டி அந்த படம் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ராஜாசாப்.

இந்தத் திரைப்படம் ஒரு ஹாரர் திரைப்படம் என்று தெரிகிறது. இதற்கு முன்பு ஆக்சன் திரைப்படங்களாக நடித்து வந்த பிரபாஸ் தற்சமயம் ஒரு காமெடி கதை களத்தில் களமிறங்கி இருக்கிறார்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் கூட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கதை களம் கொண்ட படம் என தெரிகிறது.. காமெடி பேய் படங்கள் எல்லா மொழிகளிலுமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.

தமிழில் சந்தானம் நடித்தது போலவே ஹிந்தியில் நிறைய படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதனால் பிரபாசும் தற்சமயம் அந்த மாதிரியான கதைகளை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாவதால் இதற்கு முன்பு வந்த பேய் படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.