பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க!.. மகளை எலிமினேட் செய்த காண்டா!.. வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்!.

Bigboss vanitha : பிக் பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்கள் ஓடக்கூடிய நிகழ்ச்சி என்பதையும் தாண்டி அது பிரபலங்களை மேலும் பிரபலமாக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறாதவர்கள் அல்லது சினிமாவில் புதிதாக நுழைய ஆசைப்படுபவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதற்கு ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமாரும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் வழியாகவே பிரபலமானார். அதற்கு முன்பு வரை வனிதா விஜயகுமாரை பெரிதாக யாருக்கும் தெரியாது என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் போட்ட சண்டைகளின் காரணமாக அவர் கொஞ்சம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து யூட்யூப் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலேயே அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. எனவே தனது மகள் ஜோவிகா விஜயகுமாரையும் அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியின் வழியாக பிரபலமாக்கி விடலாம் என்று அவரை பிக் பாஸ் சீசன் 7ற்கு அனுப்பினார்.

vanitha jovikha

ஆனால் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் ஜோவிகா. இவ்வளவு நாள் பிக்பாஸை புகழ்ந்து பேசி வந்த நடிகை வனிதா தற்சமயம் அந்த நிகழ்ச்சி குறித்து அதிருப்தி தெரிவித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பதே வேஸ்ட் என்பதாக அவர் பேசி வருகிறார்.

அதில் ஜெயிப்பதற்கு பதிலாக ஜெயிக்காமலே இருக்கலாம் ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுத்தமாக ஆரோக்கியமான ஒரு போட்டியாகவே இருக்கவில்லை எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பேசி வருகிறார்.

வனிதா விளையாடிய போதும் பிக் பாஸ் நிகழ்ச்சி இப்படித்தான் இருந்தது ஆனால் அப்போதெல்லாம் குரல் கொடுக்காதவர். இப்பொழுது தனது மகள் எலிமினேட் செய்யப்பட்ட பிறகு மட்டும் ஏன் குரல் கொடுக்கிறார் என்று கேள்வி எழுப்ப வருகின்றனர் நெட்டிசன்கள்.