வாரிசு நடிகர்கள் நடிகைகள் என்று பல பேர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அப்படியான ஒருவராக நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாரும் இருந்து வருகிறார்.
தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதற்கு பிறகும் கூட அவருக்கு கதாநாயகியாக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தொடர்ந்து வில்லியாக நடிப்பதற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது தமிழில் யசோதா சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து வில்லியாக நடித்தார். இப்பொழுது தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் வரலட்சுமி.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் பிரபலமாவது என்பது மிக கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று வரலட்சுமி சரத்குமாரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வரலட்சுமி சரத்குமார் என்னாலேயே தமிழ் சினிமாவில் இருக்க முடியவில்லை. தொடர்ந்து நிலைக்க முடியவில்லை அதனால் இப்பொழுது தெலுங்கு சினிமாவிற்கு சென்று விட்டேன். என்னிடம் வந்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே என்று கூறியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
வாரிசு நடிகர்களாக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் நிலைப்பது கடினம் தான் என்பது இதன் மூலம் தெரிகிறது.