Connect with us

வாரிசு படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்தா 1 கோடி! – அதிர்ந்து போன யூ-ட்யூப்பர்!

News

வாரிசு படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்தா 1 கோடி! – அதிர்ந்து போன யூ-ட்யூப்பர்!

Social Media Bar

தளபதி விஜய் நடிப்பில் தற்சமயம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். தளபதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.

நாளை 11 ஆம் தேதி வாரிசு மற்றும் துணிவு இரு படங்களுமே திரையரங்களில் வெளியாக இருக்கின்றன.  தற்சமயம் யூ ட்யூப் ரிவிவ்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மக்கள் திரையரங்குகளில் வந்து படத்தை பார்ப்பதற்கு முன்பே முதலில் யூ ட்யூப் தளத்தில் அந்த படங்களின் விமர்சனங்களை பார்க்கின்றனர். அவற்றில் ரிவ்யூ நல்லப்படியாக இருக்கும் பட்சத்தில் அந்த படங்களை பார்க்க செல்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல செய்தி தளமான பாலிமர் யூ ட்யூப் ரிவீவர்களான பிரசாந்த் மற்றும் ப்ளூசட்டை மாறன் ஆகியோருக்கு வாரிசு படக்குழு தலா 1 கோடி ரூபாய் தந்துள்ளதாகவும், அதனால் இவர்கள் இருவரும் தளபதி திரைப்படம் குறித்து நல்ல வகையில் ரிவீவ் தருவார்கள் எனவும் கூறியிருந்தது.

இதை கண்டு திடுக்கிட்ட யூ ட்யூப் ரீவிவர் பிரசாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ”நீங்கள் சொன்ன பொய்யை உண்மை என நம்பி எனது சொந்தக்காரர்கள் எனக்கு அதிக மரியாதை அளித்து வருகின்றனர். நன்றி பாலிமர்.” என கூறியுள்ளார்.

Bigg Boss Update

To Top