Connect with us

டீக்கடை பெஞ்சில் உக்காந்து போட்ட பாட்டுக்கு கிடைத்த தேசிய விருது!.. வித்யாசாகருக்கு நடந்த சம்பவம்!.

vidhyasagar parthiban kanavu

Cinema History

டீக்கடை பெஞ்சில் உக்காந்து போட்ட பாட்டுக்கு கிடைத்த தேசிய விருது!.. வித்யாசாகருக்கு நடந்த சம்பவம்!.

cinepettai.com cinepettai.com

1988 இல் பறவைகள் பலவிதம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். 1990 களில் வித்யாசாகரின் இசைக்கு என தனி மதிப்பு இருந்தது. அதிகப்பட்சம் அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன.

இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தன. 2000 க்கு பிறகு அவர் இசையமைத்த பல படங்கள் இப்போது உள்ள தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அவற்றில் ரன், வில்லன், அன்பே சிவம், தூள், கில்லி போன்றவை எல்லாம் முக்கியமான திரைப்படங்களாகும்.

இந்த நிலையில் அவரது இசை அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொள்ளும்போது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அதில் பாடல்களுக்கு வைரமுத்துதான் பாடல் வரிகளை எழுதினார்.

ஆனால் அன்று வருவதற்கு தாமதமானதால் அங்கிருந்த வைரமுத்துவின்  கவிதை நூலை எடுத்து அதில் உள்ள கவிதைக்கு தகுந்தாற் போல இசையமைத்தேன். அப்படிதான் தாலாட்டும் காற்றே வா பாடல் உருவானது என்கிறார் வித்யாசாகர்.

பொதுவாக ஏற்கனவே போட்ட இசைக்கு தகுந்தாற் போல பாடல் வரிகள் எழுதுவது எளிது. ஆனால் பாடல் வரிகளுக்கு தகுந்த மாதிரி இசையமைப்பது கடினம். இருந்தாலும் கூட அதை செய்தார் வித்யாசாகர். அதே போல பார்த்திபன் கனவு திரைப்படத்திற்கு இசையமைக்கும்போதும் ஒரு சம்பவம் நடந்தது.

பார்த்திபன் கனவு படத்திற்கு இசையமைக்கும்போது டீ கடையில் அமர்ந்து வித்யாசாகர் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது பாடலாசிரியர் கபிலனிடம் பேசிய வித்யாசாகர். அங்கே டீக்கடை பெஞ்சிலேயே ஒரு இசையை போட்டு காட்டினார்.

கபிலனும் சில நாட்களில் அதற்கு தகுந்தாற் போல பாடல் வரிகளை எழுதி வந்தார். ஆலங்குயில் கூவும் இரயில் என்கிற அந்த பாடலுக்காக கபிலனுக்கு பிறகு தேசிய விருது கிடைத்தது.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top