Actress
தல ரசிகன் எல்லாம் என் படத்துல நடிக்க கூடாது!. ப்ரேம்ஜிக்கு நோ சொன்ன விஜய்!..
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அவரது தம்பி பிரேம் ஜி காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமாகும். சென்னை 28 திரைப்படத்தில் துவங்கி மங்காத்தா, மாநாடு என அனைத்து வெங்கட் பிரபு படத்திலும் பிரேம் ஜியை பார்க்க முடியும்.
பிரேம் ஜி பயங்கரமான தல ரசிகரவார். பல படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் அஜித் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தில் விஜய்யை நாயகனாக நடிக்க வைக்கவுள்ளார்.
இந்த படத்திலும் பிரேம் ஜி நடிக்க உள்ளார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது நான் விஜய் படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் நீ தல ரசிகன் தானே. உன்னை என் படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் என கூறிவிட்டார்.
பிறகு பிரேம் ஜி விஜய்யிடம் மிகவும் கெஞ்சி கேட்டு அந்த படத்தில் நடிப்பதற்கு அனுமதி வாங்கியுள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.