பாக்குறதுக்குதான் சைலண்டு!.. மதுரையில் இளைஞன் செய்த செயலால் கடுப்பான தளபதி!..
Vijay: விஜய் தற்சமயம் அரசியலுக்கு வர இருப்பதால்தான் மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்கிறார் என்று பரவலாக பேச்சுக்கள் உண்டு. ஏனெனில் அரசியலுக்கு வருவதாக விஜய் பேச துவங்கிய பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தார் என கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கூறும் பொழுது விஜய் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு நன்மைகள் பல செய்து வந்துள்ளார். ஆனால் அவை எதுவும் பெரிதாக வெளியில் தெரிவதில்லை தற்சமயம் அரசியலுக்கு வர இருப்பதால் அவற்றை கொஞ்சம் வெளியில் தெரிவது போல செய்கிறார் அவ்வளவுதான் என்று கூறுகின்றனர்.
இதற்கு உதாரணமாக புஷி ஆனந்த் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார் விஜயின் திரைப்படம் ஒன்று ஒரு முறை மறு வெளியீடு ஆன பொழுது அந்த திரைப்படத்தை பார்க்க வந்த விஜயின் ரசிகன் ஒருவன் தனது கையில் கத்தியால் கிழித்துக்கொண்டான்.
ஆனால் இந்த விஷயம் விஜய்க்கு தெரியவில்லை ஆனாலும் ரசிகர் வட்டாரத்தில் பலருக்கும் இந்த விஷயம் தெரிந்திருந்தது. இரவு 11 மணி அளவில்தான் இந்த விஷயம் விஜயின் காதுக்கு சென்றுள்ளது. உடனே புஷ்ஷி ஆனந்திற்கு போன் செய்த விஜய் யார் அப்படி செய்து கொண்டது இதையெல்லாம் என்னிடம் கூற மாட்டீர்களா? அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவனது குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கோபப்பட்டு இருக்கிறார் விஜய்.
மேலும் அந்த இளைஞனின் நம்பரை ஒரு வழியாக கண்டுபிடித்து அவனுக்கு போன் செய்து கண்டித்து இருக்கிறார்கள் விஜய். திரைப்படத்தை படமாக பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் எந்த ஒரு அசம்பாவிதத்திலும் ஈடுபடாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார் இந்த நிகழ்ச்சியை புஷ்ஷி ஆனந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.