பாபா படத்தில் பகவதியா? – இது வித்தியாசமான க்ராஸ் ஓவரா இருக்கே?

நாட்டார் தெய்வ கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்து தற்சமயம் இந்திய சினிமாவில் நல்ல வசூல் சாதனை படைத்த திரைப்படம் காந்தாரா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து  பலரும் சாமி கதைகள், காடு தொடர்பான கதைகள் எடுக்கலாம் என கிளம்பியுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு ரஜினி நடித்த திரைப்படம் பாபா. வந்த காலக்கட்டத்தில் இந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. எனவே சாமி படங்கள் ஹிட் அடிக்கும் சமயமாக இருப்பதால் இப்போது பாபாவை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

இதற்காக படத்தை ரீ க்ரியேட் செய்து வருகின்றனர். படத்தில் நீக்கப்பட்ட பல காட்சிகளை படத்தில் சேர்த்து அதற்கு டப்பிங் பேசி வருகிறார் ரஜினி, மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் இப்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற் போல படத்தின் பாடல்களை மாற்றி அமைத்துள்ளார்.

இந்த நிலையில் பாபா பட ஷூட்டிங்கில் ரஜினியுடன் விஜய் மற்றும் ரீமாசென் நின்ற புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் விஜய் பகவதி கெட்டப்பில் வருகிறார். இதற்கு படத்திற்கும் கூட எதேனும் தொடர்பு இருக்குமா? என பேச்சுக்கள் உள்ளன.

Refresh