Connect with us

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நிஜமா இருந்த ஆளோட கதை.. ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…

Cinema History

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நிஜமா இருந்த ஆளோட கதை.. ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…

cinepettai.com cinepettai.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகுதான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் கொடுக்கும் என்கிற ஒரு நிலை வந்தது.

எனவே இதனால் ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்க தொடங்கினார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்திலும் வில்லனாக தோன்றினாள் விஜய் சேதுபதி.

விக்ரம் படத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது கதைப்படி அந்த குடும்பத்திலேயே படித்த ஒரு நபராக விஜய் சேதுபதி மட்டுமே இருப்பார். அவர் தன்னுடைய படித்த அறிவை போதை பொருட்களை உருவாக்குவதில் செயல்படுத்திக் கொண்டிருப்பார் .

அதேபோல விஜய் சேதுபதி ஒவ்வொரு முறையும் தனது மனநிலையை மாற்றிக் கொள்வதற்கு போதை பொருளை பயன்படுத்துவர். நிஜ வாழ்க்கையில் இதே போல தனது கல்வி அறிவை போதை பொருளை உருவாக்குவதற்கும், தனது மனநிலை மாற்றுவதற்கு போதை பொருளை பயன்படுத்தியவருமாக இருந்தவர்  பாப்லோ எஸ்கோபார் என்கிற பிரபலமான போதை பொருள் கடத்தல் நிபுணர்.

பாப்புலோ எஸ்கோபாரும் விஜய் சேதுபதி போலவே போதை பொருளை வைத்து ஒரு அரசாங்கத்தை உருவாக்க நினைத்தார். அதை விக்ரம் திரைப்படத்தில் ஒரு வசனமாகவே பார்க்க முடியும் விஜய் சேதுபதி ஒரு வசனத்தில் போலீசாரிடம் எனக்கான அரசாங்கத்தை என்னால் உருவாக்க முடியும் என கூறுவது போல இருக்கும்.

Pablo Escobar

எனவே பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறும் போது முழுக்க முழுக்க பாப்புலோ எஸ்கோபாரை ஒரு உதாரணமாக வைத்துதான் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை கட்டமைத்தோம் எனக் கூறியுள்ளார்.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top