ஒரு மாசத்துக்கு படத்துக்கு லீவ்… மீண்டும் கட்சி பணியில் இறங்கும் விஜய்..!

இந்த வருட துவக்கத்தில் விஜய் கட்சிக்கு வரப்போவதை அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து 2026 தேர்தலுக்கு முன்பு வரை திரைப்படங்களில் நடிப்பதாகவும் அதற்கு பிறகு கட்சி பணியை துவங்க இருப்பதாகவும் விஜய் கூறியிருந்தார்.

எனவே விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன. தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தின் பாதி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

thalapathy-vijay1

இதற்கு நடுவே ஜூன் மாதம் படப்பிடிப்புகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொள்ள இருக்கிறாராம் விஜய். அவருக்கு கொஞ்சம் அரசியல் பணிகள் இருப்பதால் ஜூன் மாதம் முழுவதும் அவற்றில் கவனம் செலுத்தப்போகிறார் விஜய் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூன் மாதம்தான் விஜய்யின் பிறந்தநாளும் வருகிறது. எனவே அன்றைய தினம் கண்டிப்பாக ரசிகர்களுக்காக ஏதாவது செய்வார் விஜய் என எதிர்பார்க்கப்படுகிறது.