Connect with us

ரமணாவிற்கு முன்பே விஜயகாந்திற்கு வந்த பட வாய்ப்பு.. தட்டி பறித்த அஜித்!.. கேப்டன் நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்!.

ajith vijayakanth

Cinema History

ரமணாவிற்கு முன்பே விஜயகாந்திற்கு வந்த பட வாய்ப்பு.. தட்டி பறித்த அஜித்!.. கேப்டன் நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்!.

cinepettai.com cinepettai.com

Vijayakanth and Ajith : தமிழில் புரட்சிகரமான திரைப்படங்கள் நடிப்பதில் எம்.ஜி.ஆர் க்கு பிறகு பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் வகையில் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

அப்படியாக விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள்தான் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்தாகதான் இருக்கும் என்று கூறலாம்.

அதேபோல ஒரே வருடத்தில் அதிகமான திரைப்படங்கள் நடித்தவரும் நடிகர் விஜயகாந்த்தான். விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக இருந்த திரைப்படம் 1981 இல் வந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம்.

இந்த திரைப்படத்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். விஜயகாந்த் எஸ்.ஏ சந்திரசேகர் இருவருக்குமே அவர்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது. அதனை தொடர்ந்து எஸ்.ஏ சந்திரசேகருக்கு நிறைய பட வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார் விஜயகாந்த்.

அவர்களால் விஜயகாந்திற்கு நிறைய வெற்றி படங்கள் கிடைத்து இருக்கின்றன. மாநகர காவல், ஊமை விழிகள் போன்ற நிறைய திரைப்படங்கள் அந்த மாணவர்களால் எடுக்கப்பட்டதுதான் இந்த நிலையில் சில காலங்கள் கழித்து விஜயகாந்த் நடிப்பில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட திரைப்படம் ரமணா.

ஆனால் ரமணா திரைப்படத்திற்கு முன்பே அதே மாதிரியான ஒரு சிறப்பான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தின் கதை விஜயகாந்த்திடம் வந்தது அதுதான் சிட்டிசன். இந்த திரைப்படத்தின் கதை விஜயகாந்திற்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்பொழுது வேறு திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதிக்குமாறு அந்த இயக்குனரிடம் கூறியிருந்தார்.

ஆனால் அந்த கதையை கேள்விப்பட்ட அஜித் அதன் மீது ஆர்வம் கொண்டு அது குறித்து இயக்குனரிடம் பேசியதால் அஜித்தை வைத்து அந்த திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் சரவண சுப்பையா. ஆனால் இந்த திரைப்படம் விஜயகாந்த் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்கிற கேள்வி இந்த செய்திக்கு பிறகு எழுகிறது.

POPULAR POSTS

kota srinivasa rao
santhanam sundar c
manikandan kavin
karathe raja prakash raj
To Top