இனிமே நாந்தான் தளபதி! – சர்ச்சையை கிளப்பிய நடிகர் விஷால்!

நடிகர் விஷால் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் இவர் நடித்த லத்தி என்கிற படம் வெளியானது. ஆனால் இந்த படம் பெரிதாக வசூல் சாதனை படைத்ததாக எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.

இதுவரை விஷால் நடித்த எந்த படங்களுமே அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் வசூலித்த அளவில் வசூல் சாதனை செய்ததில்லை என கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக முன்னணி கதாநாயகர்களோடு போட்டியில் இறங்கியுள்ளார் விஷால்.

விஷால் நடித்து லத்தி படம் வெளியான பிறகு ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார் விஷால். அங்கு விஷாலின் ரசிகர்களுமே வந்திருந்தனர். அப்போது அவரின் ரசிகர்கள் அனைவரும் புரட்சி தளபதி என ஆரவாரம் செய்தனர். உடனே அவர்களை தடுத்த விஷால் புரட்சி தளபதி இல்ல. தளபதின்னு சொல்லுங்க என கூறியுள்ளார்.

ஏற்கனவே தளபதி என்னும் பட்டத்தை விஜய் பெற்றிருக்கும்போது தன்னையும் ஏன் தளபதி என அழைக்குமாறு விஷால் கூறுகிறார். ஒருவேளை இவர் விஜய்யுடன் போட்டி போடுகிறாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொது மக்கள்.

இந்த நிலையில் தற்சமயம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார் விஷால். இந்த புகைப்படமும் தற்சமயம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Refresh