ரொமான்ஸ் மூடிற்கு மாறிய பூர்ணிமா, விஷ்ணு… புது டாஸ்க்குதான் காரணம்!..

Poornima and Vishunu : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தும் ஜோடிகளாக பூர்ணிமாவும் விஷ்ணுவும் இருந்து வருகின்றனர்.

நிகழ்ச்சி துவங்கிய பொழுது இருவருக்கும் முதலில் பிரச்சனையாகவே இருந்து கொண்டிருந்தது. பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் சுத்தமாக ஒத்து வரவே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பில் இருந்து இருவரும் சமரசமாக பேசி வருகின்றனர் இருந்தாலும் இன்னும் அவர்களுக்குL ஒரு ஒற்றுமை வராமலே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக விஜய் சொன்ன விஷயம் அமைந்தது.

விஜய் போன வாரம் பேசும்பொழுது விஷ்ணு பூர்ணிமா குறித்து பேசி டிவியில் ஒளிபரப்பான ஒரு விஷயத்தை சுட்டி காட்டி இருந்தார். இதனால் பூர்ணிமா அன்று முழுவதும் அழுது கொண்டிருந்தார் ஆனால் தற்சமயம் மீண்டும் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

டான்ஸ் டாஸ்க் ஒன்றை பிக் பாஸில் இன்று அறிவித்துள்ளனர். அதில் பலரும் ஜோடியாக ஆடுமாறு கூறப்பட்டுள்ளது அதில் பூர்ணிமா விஷ்ணுவை கட்டி பிடித்துக் கொண்டு ஆடி இருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இவர்கள் இருவரும் உண்மையிலேயே அவர்களுக்குள் காதலித்துக் கொள்கிறார்களோ என்று இது குறித்து தற்சமயம் பேச்சுக்கள் தொடங்கி உள்ளன.