Connect with us

இதுதான் நீ பண்ணுன தப்பு!.. உதவி இயக்குனரை ரோட்டிலேயே விட்டு சென்ற ஷங்கர்!.. அவ்ளோ ஸ்ட்ரிக்டா!.

director shankar

Cinema History

இதுதான் நீ பண்ணுன தப்பு!.. உதவி இயக்குனரை ரோட்டிலேயே விட்டு சென்ற ஷங்கர்!.. அவ்ளோ ஸ்ட்ரிக்டா!.

Social Media Bar

Director Shankar: தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கரை பொறுத்தவரை குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் மலை, காடு, கம்மாய் என்று எங்கு பார்த்தாலும் ஓவியங்களை வரைந்து வைத்தாவது அந்த திரைப்படங்களுக்கு செலவுகளை இழுத்துவிடுவதை பார்க்க முடியும்.

நண்பன் மாதிரியான திரைப்படங்களில் பாடல்களுக்கு வேண்டுமென்றே அதிக செலவுகளை செய்திருப்பார். இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஷங்கர் முதன் முதலாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாகதான் இயக்குனராக அறிமுகமானார்.

director shankar
director shankar

அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். உதவி இயக்குனராக இருந்தப்போதே இவர் படத்திற்காக மிகவும் டெடிகேஷனுடன் வேலை பார்ப்பவர் என கூறப்படுகிறது. சரத்குமார் நடிப்பில் சூரியன் திரைப்படம் உருவாகி கொண்டிருந்தப்போது அதில் முதல் அசிஸ்டெண்டாக ஷங்கர் பணிப்புரிந்து வந்தார்.

ஷங்கர் செய்த காரியம்:

இயக்குனர் பவித்திரன் அந்த படத்தை இயக்கி வந்தார். அப்போது மறுநாள் படப்பிடிப்புக்கு போலீஸ் உடைகள் தேவைப்பட்டது. அங்கு உதவி இயக்குனராக இருந்த வெங்கடேஷ்தான் உடை விஷயங்களுக்கு பொறுப்பாளராக இருந்தார்.

அவரை அழைத்த ஷங்கர் நாளை படப்பிடிப்புக்கு போலீஸ் உடை தயாரா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் கூறும்போது சொல்லியாச்சு சார் நாளைக்கு வந்திரும் எனக் கூறியுள்ளார். நீங்கள்  நேரில் சென்று பார்த்தீர்களா? என கேட்டுள்ளார் ஷங்கர்.

suryan
suryan

அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் இல்லை சார் என கூறவும் அவரை அழைத்து கொண்டு உடைகள் தயார் செய்யும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றார் ஷங்கர். அங்கு கேட்ட்போது இன்னமும் ஆடை தயாராகவில்லை என தகவல் வந்தது.

உடனே வெளியே வந்த ஷங்கர் வெங்கடேஷிடம் நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. நாளை காலை 7 மணிக்குள் போலீஸ் உடைகள் இருக்க வேண்டும் என கூறிவிட்டு அவரை சாலையிலேயே விட்டுவிட்டு ஆட்டோ பிடித்து சென்றார்.அந்த அளவிற்கு வேலை விஷயத்தில் ஷங்கர் சரியாக இருப்பார் என கூறுகிறார் வெங்கடேஷ்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top