Cinema History
அனிரூத்தை விட 9 கோடி அதிகம்!.. இன்னமும் யுவன் மார்க்கெட் குறையல போல…
காலம் காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு சிறப்பான ஒரு மார்க்கெட் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு இசையமைப்பாளர் இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பார்.
ஒரு காலத்தில் இளையராஜா அப்படியான ஒரு இடத்தை பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏ. ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா என ஒவ்வொரு நபர்களாக அந்த இடத்தை பிடித்தனர். தற்சமயம் இசையமைப்பாளர் அனிரூத்தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பளாராக இருக்கிறார்.
தொடர்ந்து வெளியாகி வரும் தமிழ் சினிமா படங்களில் அதிகமாக அனிரூத்தான் இசையமைத்து வருகிறார். தற்சமயம் பாலிவுட்டிலும் இசையமைக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள தளபதி 68 படத்தின் பாடல்கள் 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாம். அனிரூத் இசையமைத்த லியோ படத்தின் பாடல்களே 16 கோடிக்குதான் விற்பனை ஆனதாம்.
இந்த நிலையில் யுவன் இசைக்கு இன்னமும் மார்க்கெட் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது!..