Connect with us

அக்ரிமெண்ட் போட்டுட்டு இப்படி பொய் சொல்லலாமா?.. யுவன் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஆர்.கே சுரேஷ்!.. பஞ்சாயத்து இப்ப முடியாது போல!.

rk suresh yuvan shankar raja

Latest News

அக்ரிமெண்ட் போட்டுட்டு இப்படி பொய் சொல்லலாமா?.. யுவன் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஆர்.கே சுரேஷ்!.. பஞ்சாயத்து இப்ப முடியாது போல!.

cinepettai.com cinepettai.com

Yuvan Shankar Raja : தமிழ் சினிமாவில் தற்சமயம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆர் கே சுரேஷ் இடையேயான பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கின்றன.

தமிழில் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஆர்.கே சுரேஷ் மருது மாதிரியான சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக சில திரைப்படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

ஆர் கே சுரேஷ் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் காடுவெட்டி. இந்த திரைப்படமே ஜாதிய ரீதியான ஒரு திரைப்படம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதனால் ஆர்.கே சுரேஷ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் அவரது ஜாதியை உயர்த்தி பேசும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் என்று ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் இருக்கின்றன.

எனவே முக்கிய பிரபலங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து விலகியே இருக்கின்றனர். தற்சமயம் அவர் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படமானது நாளை திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கி இருக்கிறார்.

பதிலளித்த யுவன்:

இதையடுத்து அடுத்து  ஆர்.கே சுரேஷ் நடித்து இயக்கும் திரைப்படம் தென்மாவட்டம். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்று போஸ்டரில் போட்டு அந்த போஸ்டரை வெளியிட்டு இருந்தார் ஆர்.கே சுரேஷ்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட யுவன் சங்கர் ராஜா கூறும் பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கூற கடமைப்பட்டுள்ளேன் தென் மாவட்டம் திரைப்படத்தில் இசையமைப்பதற்கு யாரும் என்னிடம் இதுவரை வந்து கேட்கவே இல்லை. நான் அந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

 இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ஆர்.கே சுரேஷ் என்னிடம் ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்கும் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள். தயவு செய்து அதனை சரிப்பார்க்கவும் என்று யுவன் சங்கர் ராஜாவிற்கு பதிலளித்திருக்கிறார் ஆர்.கே சுரேஷ்.

இதனை அடுத்து இதற்கு யுவன் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று காத்திருக்கின்றனர்.

POPULAR POSTS

To Top