நான் சாகுற வரைக்கும் என் படத்துல அதை மட்டும் நடக்க விட மாட்டேன்!.. பாலச்சந்தரிடம் மறுத்து பேசிய ரஜினிகாந்த்!..

rajinikanth

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் கூட இன்னமும் அவர் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

இந்த திரைப்படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு பிறகு வரவிருக்கும் கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. கூலி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அவர் சந்தித்த பிரச்சனைகள் நிறைய இருந்தன. அதில் முக்கியமான பிரச்சனை என்றால் அது அவரது உச்சரிப்புதான். இப்போது வரையிலுமே ரஜினிகாந்திற்கு தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சீராக இருக்காது.

மறுத்த ரஜினிகாந்த்:

சினிமாவில் அறிமுகமானப்போது அவருக்கு அது ஒரு பிரச்சனையாக இருந்தது. ஒரு நடிகனுக்கு உச்சரிப்பு ரொம்ப முக்கியம். எனவே சீக்கிரம் தமிழில் நன்றாக பேச கற்றுக்கொள் என பாலச்சந்தர் கூறியிருந்தார். இருந்தாலும் ரஜினிக்கு உச்சரிப்பு சரியாக வராததால் அவருக்கு டப்பிங் வேறொரு ஆள் செய்தால் சரியாக இருக்கும் என பாலச்சந்தர் நினைத்தார்.

ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரை என் படங்களுக்கு நான் தான் டப்பிங் பேசுவேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ரஜினி. அதன் பிறகு ரஜினியின் நடிப்புக்கு முன்னால் அவரது உச்சரிப்பு யாருக்கும் உறுத்தலாக இல்லை. எனவே மக்களே பிறகு அதை கண்டுக்கொள்ளாமல் விட்டனர்.