தமிழில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். ஆரம்பத்தில் காதலில் சொதப்புவது எப்படி? திரைப்படம் மூலம் வரவேற்பை பெற்றார்.
அதற்கு பிறகு அவருக்கு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு மாதிரியான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு கதாநாயகி ஆக வேண்டும் என்பதற்காக அவர் மாற்றத்தை செய்தார்.
தொடர்ந்து செயற்கை அறுவை சிகிச்சை செய்து கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் மேலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன.