Tuesday, May 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

by Raj
May 19, 2026
in Movie Reviews, Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட்டில் அடிக்கடி திரைப்படங்கள் வருவதுண்டு. ஜான் விக் மாதிரியான நிறைய படங்களில் காட்சி அமைப்பு அப்படிதான் இருக்கும். ஒரு இரவில் பெரிய கேங்ஸ்டர் குழு கதாநாயகனை முற்றுகையிடும்.

அப்போது கதாநாயகன் அவ்வளவு பேரையும் சமாளித்து வெற்றி பெறுவான். பெரும்பாலும் விடியும்போது கதை முடிந்துவிடும். அதே மாதிரியான அம்சத்தில்தான் தமிழில் கைதி திரைப்படமும் வந்தது. அதன் பிறகு அதன் வெற்றியை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் ஒரு இரவில் நடப்பது போன்ற கதை களத்தில் வந்தன.

Read More:  lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

இப்போது அர்ஜுன் நடித்து அடுத்து வரும் படமும் அந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் Blast என்கிற இந்த திரைப்படத்தில் அர்ஜூன், ப்ரீத்தி முகுந்த் அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.

சுபாஷ் கே ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை

படத்தின் கதைப்படி அர்ஜூன் ஒரு கராத்தே மாஸ்டராக இருந்து வந்துள்ளார். அவர் தனது மகளை சிறு வயது முதலே மிகவும் தைரியசாலியாக வளர்க்கிறார். எந்த ஒரு தவறு நடந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும் என சொல்லி வளர்க்கிறார்.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

வளர்ந்த பிறகு மகள் ப்ரீத்தி முகுந்த் ஒரு மெடிக்கலில் வேலை பார்க்கிறார். அங்கு கேங்க்ஸ்டர் செய்யும் ஒரு அநீதியை அவர் போலீசில் சொல்லிவிடுகிறார். இதனை அடுத்து அந்த பெண் மற்றும் அவரது குடும்பம் பற்றி கேங்ஸ்டர் குழு விசாரிக்கிறது.

அப்போது அர்ஜுன் ஹெச்.எம் வேலையில் இருப்பதாகவும் மனைவி ஹவுஸ் வைஃப் ஒரு மகள். ஒரு சாதாரண குடும்பம்தான் அவர்கள் குடும்பம் என தகவல் வருகிறது. சரி என அந்த குடும்பத்தை கொல்ல சொல்லி உத்தரவிடுகிறான் அந்த கேங்ஸ்டர்.

Read More:  முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

இதனை அடுத்து ஒரு பெரிய கும்பல் அவர்களை போட்டு தள்ள இரவில் அர்ஜுன் வீட்டுக்குள் நுழைகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் அர்ஜுனுக்கு மட்டுமின்றி மகள் ப்ரீத்தி முகுந்த் மனைவி அபிராமி எல்லோருமே கராத்தே தெரிந்தவர்கள்.

குடும்பத்தை கொல்ல சென்ற கும்பல் அந்த கராத்தே குடும்பத்திடம் மாட்டுகிறது. அதனை தொடர்ந்து இந்த கேங்ஸ்டர் எப்படி முறியடிக்கப்படுகிறான் என்பதுதான் கதையாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: arjunblast movietamilcinemaஅபிராமிஅர்ஜுன்தமிழ் சினிமாப்ளாஸ்ட்
Previous Post

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

Related Posts

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

Recent Updates

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

முதல்வருக்கு எதிரா செய்தி போட முடியாதா? கருத்து சுதந்திரத்தை பறிக்கும் புதிய ஆணை…

May 19, 2026
Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved