Connect with us

அழகிய தமிழ் மகன் வில்லனின் ரீ எண்ட்ரியா தளபதி 67 – டீகோடிங் செய்யும் ரசிகர்கள்!

Latest News

அழகிய தமிழ் மகன் வில்லனின் ரீ எண்ட்ரியா தளபதி 67 – டீகோடிங் செய்யும் ரசிகர்கள்!

cinepettai.com cinepettai.com

கடந்த ஒரு வாரமாக இணையத்தளம் முழுக்க வலம் வரும் பெயராக தளபதி 67 உள்ளது. நடிகர் விஜய்க்கு இந்த படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு தனியாக ஒரு ரசிக வட்டாரம் உருவானதால் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கினாலே அந்த படம் நன்றாக ஓடும் என்கிற நிலை வந்துவிட்டது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கியது.

இதையடுத்து இன்று தளபதி 67 படத்தின் பெயர் மற்றும் க்லிம்ஸ் காட்சிகள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் இருக்கும் விஜய் பார்ப்பதற்கு அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் வரும் வில்லன் விஜயை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

எனவே அந்த வில்லன் கதாபாத்திரத்தை லோகேஷ் தளபதி 67 திரைப்படத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அது தொடர்பான புகைப்படங்களையும் தற்சமயம் ஷேர் செய்து வருகின்றனர்.

POPULAR POSTS

vijay
ajith
sundar c
bharath
samantha prabhas
vijayakanth SA chandrasekar
To Top