Connect with us

சன் பிக்சர்ஸ்கிட்ட அந்த விஷயத்தை மறைச்சுதான் ஜெயிலர் படத்தை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்.

kalanithi maaran director nelson

Cinema History

சன் பிக்சர்ஸ்கிட்ட அந்த விஷயத்தை மறைச்சுதான் ஜெயிலர் படத்தை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்.

சன் பிக்சர்ஸ்கிட்ட அந்த விஷயத்தை மறைச்சுதான் ஜெயிலர் படத்தை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை உடைத்த நெல்சன்.

Social Media Bar

லோகேஷ் கனகராஜிற்கு பிறகு தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரமாகவே பெரும் உயரத்தை தொட்ட இயக்குனராக நெல்சன் இருக்கிறார். கோலமாவு கோகிலா திரைப்படத்திலேயே ஓரளவு அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய டாக்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் அதற்குப் பிறகு அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் நெல்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் அதற்கடுத்து ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் நெல்சன். படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே ஜெயிலர் திரைப்படம் குறித்து அதிக நம்பிக்கையில் இருந்தார் ரஜினிகாந்த்.

மேலும் நெல்சனுக்கும் ரஜினிக்கும் இது ஒரு முக்கியமான படமாக இருந்தது ஏனெனில் அதற்கு முன்பு இருவருமே தோல்வி படங்களை கொடுத்திருந்தனர். இந்த நிலையில் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.

இயக்குனர் ஆவதற்கு முன்பு விஜய் டிவியில் பணிபுரிந்தார் நெல்சன் பொதுவாகவே விஜய் டிவியில் பணிபுரிபவர்களுக்கு சன் டிவியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது என கூறப்படுகிறது. எனவே இது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது விஜய் டிவியில் நீங்கள் வேலை பார்த்ததை சன் பிக்சர்ஸிடம் கூறினீர்களா ?என்று வேடிக்கையாக கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த நெல்சன் இல்லை அவர்கள் வாய்ப்பு கொடுக்கும் வரை நான் கூறவே இல்லை படப்பிடிப்பு துவங்கிய பிறகு தான் நான் விஜய் டிவியில் வேலை பார்த்த விஷயத்தை கூறினேன். அதுவரை அந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்திருந்தேன். என்று கூறியுள்ளார் நெல்சன்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top