என்ன பாலிவுட்ல என்னை கேவலமா பேசுனப்ப உறுதுணையா நின்ன்னாங்க அந்த நடிகை!.. தனுஷின் மானம் காத்த நடிகை!..
Actor Dhanush : தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நடிகராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் தனுஷ். முதலில் தமிழில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க துவங்கினார்.
அதன் பிறகு அவருக்கு ஹாலிவுட்டில் முன்னேறி போவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. பாலிவுட்டில் முதன்முதலாக ராஞ்சனா என்னும் திரைப்படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார் தனுஷ்.
அந்த திரைப்படத்தில் அவரது அனுபவம் குறித்து தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ். ராஞ்சனா திரைப்படத்தில் நடிக்கும் போது தனுஷ் ஒல்லியாக இருந்ததால் அங்கு நிறைய உருவ கேலிக்கு உள்ளானார். உண்மையில் தமிழ் சினிமாவில் அவர் வந்த ஆரம்ப காலகட்டத்தில் மக்களால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார்.

இருந்தாலும் ஒரு அளவிற்கு மேல் மக்கள் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்ள துவங்கினர். பாலிவுட்டிலும் இதே சம்பவம் நடந்தது. அப்பொழுது பட ப்ரொமோஷனுக்காக பாலிவுட்டில் நிறைய பேட்டிகளுக்கு தனுஷ் சென்றார். அப்படி செல்லும் போதெல்லாம் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் முதலில் அவரது உருவத்தை பற்றிதான் கேள்விகள் கேட்பார்கள்.
அப்படி கேட்கும் போதெல்லாம் படத்தின் கதாநாயகியாக நடித்த சோனம் கபூருக்கு கோபம் வந்து விடுமாம். அவர் உடனே ஏன் தனுஷின் உருவத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு அந்த கேள்வியை நிறுத்தி விடுவாராம்.
இந்த விஷயத்தை கூறிய தனுஷ் பாலிவுட்டில் முதன்முதலாக அறிமுகமானபோது நான் பயத்துடன்தான் சென்றேன் ஆனால் அப்பொழுது எனக்கு உறுதுணையாக நின்றது நடிகை சோனம் கபூர்தான் என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.