Tag Archives: Bollywood cinema

அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட திஷா பதானி..! இப்போ இதான் ட்ரெண்ட்..

கல்கி, கங்குவா மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து இருப்பவர் நடிகை திஷா பதானி.

இவர் இந்தியா முழுவதுமே பிரபலமான நடிகையாகதான் இருந்து வருகிறார். அதனால்தான் தொடர்ந்து இவருக்கு பேன் இந்தியா திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஹிந்தியில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இப்போது இவர் வாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திஷா பதானி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை கவரும் வகையில் திஷா பதானி சில புகைப்படங்களை வெளியிட்டார். அவை எல்லாம் அதிக பிரபலமடைந்து வருகின்றன.

 

அந்த காட்சியை நீக்கிய படக்குழு.. வார் 2 திரைப்படத்தில் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..!

தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் அதே ஆகஸ்ட் 14ஆம் தேதி பாலிவுட்டில் வெளியாக இருக்கும் திரைப்படம் வார் 2.

இந்த திரைப்படத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பாலிவுட் பக்கம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் டப்பிங்கில் இந்த படம் வெளியாக இருக்கிறது என்றாலும் கூட கூலி திரைப்படம் தமிழில் வெளியாவதால் இந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை க்யாரா அத்வானி நடித்திருந்தார். ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் இவர். இந்த நிலையில் இவருக்கு வார் 2 திரைப்படத்தில் அதிக கவர்ச்சியான காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் படம் தணிக்கை குழுவிற்கு செல்லும் பொழுது இந்த காட்சிகளை நீக்கினால் தான் யுஏ சர்டிபிகேட் கொடுக்கப்படும் என்று கூறிய காரணத்தினால் வரும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன இது ரசிகர்களுக்கு அதிக ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

வாரிசு நடிகருக்கு மனைவியாகும்  சாய் பல்லவி.. இனிமே கைல பிடிக்க முடியாது போல..!

நடிகை சாய்பல்லவி தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே வாய்ப்பை பெற்று நடித்து வரும் நடிகையாக இருக்கிறார். முதன் முதலாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை நடித்து வந்தார் சாய் பல்லவி.

மற்ற சினிமாவுடன் ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார் சாய் பல்லவி. ஆனால் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

sai pallavi

அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அடுத்ததாக பாலிவுட்டில் பெரும்பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது.

நடிகர் அமீர்கானின் மகன் நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து அவர் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் அவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய்பல்லவி.

அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன என பேச்சுக்கள் இருக்கின்றன.

நடிகருக்கு போட்ட மிகப்பெரிய ஸ்கெட்ச்… பாகிஸ்தானில் இருந்து இறங்கும் ஆயுதங்கள்.. பெரிய ஆபத்து காத்திருக்கு?.

வெகு காலங்களாகவே பாலிவுட் சினிமாவிற்கும் ரவுடிசத்திற்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் மொத்த பாலிவுட் சினிமாவும் மும்பையில் இருக்கும் தாதாக்களின் கையில்தான் இருந்தது என்று ஒரு பேச்சு உண்டு.

அந்த அளவிற்கு சினிமாவில் அவர்களது புழக்கம் உண்டு. இந்த நிலையில் ஒரு பெரிய தாதாவுக்கும் சல்மான் கானுக்கும் இடையே வெகு நாட்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சல்மான்கானை தீர்த்து கட்டுவதற்கு அந்த ரவுடி பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக பலரை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார் ரவுடி லாரன்ஸ்.

salman khan

கட்டம் கட்டும் ரவுடி:

தொடர்ந்து சல்மான் கானிடம் இவர் பிரச்சனை செய்து வருகிறார். சல்மான் கானுக்கும் இவருக்கும் இடையே வெகு நாட்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவரை தாக்குவதற்காக பல ஆட்களையும் நியமித்து இருக்கிறாராம் லாரன்ஸ்.

மேலும் சல்மான்கானை தீர்த்துக்கட்ட பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை இவர் இறக்குமதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பலரையும் பல இடங்களில் வேலைக்கு அமர்த்திருக்கிறார்.

இது மட்டுமன்றி தொடர்ந்து 50 பேர் சல்மான் கானின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு இனி சல்மான் கானுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சல்மான்கான் உடன் இருந்த நட்புதான் காரணம்.. கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்.. ரவுடி கொடுத்த வாக்குமூலம்..!

பாலிவுட்டை பொருத்தவரை அங்கு எப்போதுமே ரவுடிகளின் ஆதிக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் ரவுடிகளின் ஆக்கிரமிப்பு என்பதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இங்கு உள்ள சினிமா போல இல்லாமல் அங்கு இந்த ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நிறைய நடிகைகள் பாலிவுட்டில் அறிமுகமாகாமல் தென்னிந்தியா பக்கம் நடிப்பதற்கு வந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் நடிகருடன் இருந்த நட்பின் காரணமாக பிரபல அரசியல் தலைவர் தற்சமயம் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பாபா சித்திக் எனப்படும் அரசியல் பிரமுகர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்.

baba siddique

சல்மான்கான் நண்பர்:

அவர் மூத்த அரசியல் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூலமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இது வட இந்தியாவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்த கொலைக்கு லாரன்ஸ் என்னும் ரவுடியின் கும்பல் பொறுப்பேற்று இருக்கிறது. லாரன்ஸின் கும்பலுக்கும் நடிகர் சல்மான் கானுக்கும் இடையே ஏற்கனவே நிறைய நிறைய பிரச்சனைகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாபா சித்திக் சல்மான்கான் உடன் நட்பில் இருந்ததால் தான் அவரை கொன்றோம் என்று இந்த குழு கூறி இருக்கிறது இது பாலிவுட் சினிமாவிலும் ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யம்மாடியோவ்.. கர்ப்பிணி பொண்ணு ஒண்ணுமே போடாம போட்டோ.. இணையத்தை அரள விட்ட தீபிகா படுகோனே..!

பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம் என்கிற திரைப்படம் மூலமாக ஷாருக்கானால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை தீபிகா படுகோனே. பெரும்பாலும் ஹிந்தி சினிமாவில் ஷாருக்கானால் ஒரு நடிகை அறிமுகம் செய்யப்படுகிறார் என்றாலே அவர் மிகப் பிரபலமாகிவிடுவார்.

அதேபோல சல்மான்கானால் அறிமுகமாகும் நடிகைகள் சினிமா துறையை விட்டு கொஞ்ச நாட்களில் போய் விடுவார்கள். இது பாலிவுட்டில் ஒரு ராசியாகவே இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவியாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவையும் பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ஷாருக்கான்தான்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனேவை பொறுத்தவரை இப்பொழுதும் அவர் ஷாருக்கானிடம் நன்றி மறவாமல் இருந்து வருகிறார். ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டு வந்த பிறகும் கூட ஷாருக்கான் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினால் அவருக்கு இருக்கும் மாற்று திரைப்படங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க வந்து விடுவார்.

அதற்கு முக்கிய காரணம் அவர் தன் இவரை வளர்த்து விட்டவர் என்பதால்தான். இந்த நிலையில் தீபிகா படுகோனே ஹாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பல வருடங்களாகவே ஒரு வெற்றி ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.

புது புகைப்படங்கள்

நிறைய திரைப்படங்களிலும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தார். அதில் நடித்திருக்கும் பொழுதே அவர் கர்ப்பமான ஒரு பெண்ணாகதான் நடித்திருந்தார்.

அதேபோல தற்சமயம் உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறார் தீபிகா படுகோனே. இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதோடு நிறைய விருது வழங்கும் விழாக்களுக்கு வருகை தந்திருந்தார் தீபிகா படுகோனே. இன்னும் சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்து முழுக்க முழுக்க உடலை காட்டும் விதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் தீபிகா படுகோனே அதில் தனது கணவருடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றன. ஒரு பக்கம் ரசிகர்களுக்கு தூக்கி வாரி போடும் வகையில் இந்த புகைப்படங்கள் இருந்தாலும் கூட இவை அதிக ட்ரெண்டாகி வருகின்றன.

அனிமல் பட நடிகையுடன் ரொமான்ஸில் இறங்கிய தனுஷ்.. மறுபடியும் பாலிவுட்டிலா!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் தற்சமயம் அவரே இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராயன். அந்த திரைப்படமும் வெகு சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கிறது.

பாலிவுட்டில் தனுஷ்:

இந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

dhanush

ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். நெகட்டிவ் க்ளைமேக்ஸை கொண்ட திரைப்படம் என்றாலும் அந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அனிமல் கதாநாயகி:

இந்த நிலையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக அதன் அடுத்த பாகம் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார்.

அனிமல் படத்தில் பிரபலமான நடிகை டிரிப்தி டிம்ரிதான் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் கவர்ச்சியில் உச்சக்கட்டம் காட்டும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார்.

அவர்களை நம்ப பயமாக இருக்கிறது.. அனிமல் படம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா!.

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிகவும் முக்கியமானவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா.

அதற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்தார். தமிழிலும் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கிய உடனே அவருக்கு தமிழ் சினிமாவின் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே நடித்தார்.

பாலிவுட்டில் எண்ட்ரி:

இந்த நிலையில் தற்சமயம் புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமா மீது ஆர்வம் காட்டி வருகிறார் ராஷ்மிகா. அந்த வகையில் பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபருடன் சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தில் அதிக முத்தக் காட்சிகள் இருந்தது கூட சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயமாக இருந்து வந்தது.

ரசிகருக்கு பதில்:

இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருபவர் ராஷ்மிகா. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் அனிமல் திரைப்படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்து ”ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா அதில் ஒரு சின்ன திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவதுதான் பயமாக இருக்கிறது ஆனால் எல்லா மனிதர்களும் அப்படி இல்லை மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று பதில் அளித்திருக்கிறார்.

நிஜமான பிகிலு இவர்தானாம்!.. மைதான் பட விமர்சனம்!.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் இன்ரு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் மைதான். இந்த திரைப்படம் கால் பந்து ஆட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது.

சையத் அப்துல் ரகிமன் என்கிற உண்மையான ஃபுட் பால் கோச்சின் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாக மைதான் இருக்கிறது. இந்த சையத் அப்துல் ரகிமன் இந்திய ஃபுட் பால் அணிக்கு கோச்சாக இருந்துள்ளார்.

இந்த திரைப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் அமித் ஷர்மா இயக்கியுள்ளார். 1950 காலக்கட்டங்களில் ஃபுட் பால் அணியின் கோச்சாக இருந்தார். இவர் இருந்த காலம் இந்திய கால்பந்து விளையாட்டின் பொற்காலம் என கூறப்படுகிறது.

உலக அளவில் இந்திய கால்பந்து ஆட்ட குழுவை இவர் நிலை நிறுத்தியிருக்கிறார். அந்த சமயங்களில் இவர் பட்ட கஷ்டங்களை கூறும் வகையில் இந்த படம் அமைந்திருக்கிறது. பிகில் திரைப்படத்தை விடவும் ஃபுட் பால் குறித்து அதிக தகவல்களை இந்த படம் பேசுவதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

தயாரிப்பு ரீதியாகவும் இந்த படம் சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. நாமே ஏதோ கால் பந்து மைதானத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. எப்படி பார்த்தாலும் நடிகர் அஜய் தேவ்கன் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும்.

என்ன பாலிவுட்ல என்னை கேவலமா பேசுனப்ப உறுதுணையா நின்ன்னாங்க அந்த நடிகை!.. தனுஷின் மானம் காத்த நடிகை!..

Actor Dhanush : தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நடிகராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் தனுஷ். முதலில் தமிழில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க துவங்கினார்.

அதன் பிறகு அவருக்கு ஹாலிவுட்டில் முன்னேறி போவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. பாலிவுட்டில் முதன்முதலாக ராஞ்சனா என்னும் திரைப்படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார் தனுஷ்.

அந்த திரைப்படத்தில் அவரது அனுபவம் குறித்து தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ். ராஞ்சனா திரைப்படத்தில் நடிக்கும் போது தனுஷ் ஒல்லியாக இருந்ததால் அங்கு நிறைய உருவ கேலிக்கு உள்ளானார். உண்மையில் தமிழ் சினிமாவில் அவர் வந்த ஆரம்ப காலகட்டத்தில் மக்களால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார்.

dhanush

இருந்தாலும் ஒரு அளவிற்கு மேல் மக்கள் அவரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்ள துவங்கினர். பாலிவுட்டிலும் இதே சம்பவம் நடந்தது. அப்பொழுது பட ப்ரொமோஷனுக்காக பாலிவுட்டில் நிறைய பேட்டிகளுக்கு தனுஷ் சென்றார். அப்படி செல்லும் போதெல்லாம் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் முதலில் அவரது உருவத்தை பற்றிதான் கேள்விகள் கேட்பார்கள்.

அப்படி கேட்கும் போதெல்லாம் படத்தின் கதாநாயகியாக நடித்த சோனம் கபூருக்கு கோபம் வந்து விடுமாம். அவர் உடனே ஏன் தனுஷின் உருவத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு அந்த கேள்வியை நிறுத்தி விடுவாராம்.

இந்த விஷயத்தை கூறிய தனுஷ் பாலிவுட்டில் முதன்முதலாக அறிமுகமானபோது நான் பயத்துடன்தான் சென்றேன் ஆனால் அப்பொழுது எனக்கு உறுதுணையாக நின்றது நடிகை சோனம் கபூர்தான் என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

கொசுவலை உடையில் குறுக்க மறுக்க காட்டுறேன்! – சூடேத்தும் பாலிவுட் நடிகை!

 தமிழ் சினிமாவை காட்டிலும் அதிகமான கவர்ச்சியை கொண்ட இடமாக பாலிவுட் சினிமா உள்ளது. பாலிவுட்டில் 2018 ஆம் ஆண்டு முதல் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருபவர் நடிகை நேகா மாலிக்.  2018 இல் இருந்து இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். 

ஆனால் ஆரம்ப கட்டத்தில்  இவர் ஆல்பம் பாடல்களில் தான் நடித்து வந்தார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வரை நான்கு ஆல்பம் பாடல்களில் நடித்திருந்தார்.  அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு கந்தி ஃபெர் ஆ கே என்கிற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

 அதைத் தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் நேகா மாலிக். இதுவரை பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.  வளர்ந்து வரும் பாலிவுட் நடிகைகளில் மேகா மாலிக்கும் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

 தற்சமயம் ரசிகர்கள் மனதை மயக்கும் வகையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இந்திய ஹீரோயின் யாருமே பண்ணுனது கிடையாது –  மூன்றே நாளில் உலகை சுற்றிய பிரியங்கா சோப்ரா!

இந்திய நடிகைகளில் முதன் முதலாக பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்கா சோப்ரா விடாப்படியான தன்னம்பிக்கை கொண்டவர் என பலராலும் அழைக்கப்பட்டவர். அவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறுகிறார்.

2011 ஆம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அதை பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது.

அதே சமயம் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் ப்ரியங்கா சோப்ராவிற்கு ஒரு படத்திற்காக விருது வழங்க இருந்தது. இரண்டு நிகழ்வுகளும் ஒரு நாள் வித்தியாசத்தில் நடைப்பெற்றன. இரண்டிற்குமே ப்ரியங்கா சோப்ரா போய் ஆக வேண்டும். ஆனால் இரண்டு நாடுகளும் வெகு தூரத்தில் இருந்தன.

உடனே ப்ரியங்கா சோப்ரா ஒரு முடிவு செய்தார். விமான பயணம் மூலம் இதை செயல்படுத்த முடிவெடுத்தார். மூன்றே நாள் தொடர்ந்து ஓய்வில்லாமல் பயணம் செய்து இரு நாடுகளிலும் நடந்த நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டார் ப்ரியங்கா சோப்ரா.

இப்படியாக எப்போதும் சினிமாவில் அவருக்கு வரும் சவாலான விஷயங்களை எதிர்க்கொண்டது மூலமே அவர் வளர்ச்சி அடைய முடிந்தது என அவர் கூறியிருந்தார்.