சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்புக்காக போற்றப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமல்ஹாசன் செய்த சாதனைகள் எக்கச்சக்கம்.
சினிமாவில் உள்ள அனைத்து துறைகளை குறித்தும் முழுதாக அறிந்தவர் கமல்ஹாசன். இப்போதும் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் மணிகண்டன், லோகேஷ் கனகராஜ் மாதிரியான பிரபலங்களுக்கு பிடித்த நடிகராக கமல்ஹாசன் தான் இருந்து வருகிறார்.
அதே போல தமிழ் சினிமாவில் நிறைய புது முயற்சிகளை செய்து வருகிறார் கமல்ஹாசன். தற்சமயம் கூட ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் கமல்ஹாசன். அந்த அளவிற்கு அடுத்தடுத்து வரும் தொழில்நுட்பத்தை அவர் கற்றுக்கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் இதுக்குறித்து நடிகர் ராதா ரவி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும்போது கமல்ஹாசனை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இப்போது இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் கமல்ஹாசன் அளவிற்கு சினிமாவை அறிந்தவர்களா என்பது சந்தேகம்தான்.
அவருக்கு சினிமாவில் உள்ள எல்லா துறைகளை குறித்தும் தெரியும். இப்போதுவரை சினிமாவை கற்றுக்கொண்டே இருப்பவர் கமல்ஹாசன் என கூறியுள்ளார் ராதா ரவி.