News
நான் மிரட்டல.. என்னைதான் மிரட்டுறாங்க..! – நடிகர் விமல் அதிர்ச்சி விளக்கம்!
நடிகர் விமல் மீது நேற்று தயாரிப்பாளர் ஒருவர் மோசடி புகார் கொடுத்த நிலையில் அதுகுறித்து நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் களவாணி, வாகை சூட வா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். அதற்கு பின் பல்வேறு படங்களில் நடித்தாலும் அந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் பட வாய்ப்பு விமலுக்கு குறைந்தது.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான விலங்கு வெப் சிரிஸில் போலீஸாக நடித்த விமல் மீண்டும் பேசப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தனக்கு நடிகர் விமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சென்னை பெரவள்ளூரை சேர்ந்த கோபி என்பவர், விமல் அவர் நடித்த மன்னர் வகையறா படத்திற்காக தன்னிடம் ரூ.5 கோடி கடனாக வாங்கியதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காசை கொடுக்காத களவாணி விமல்? தயாரிப்பாளர் புகார்!
ஆனால் அந்த பணத்தை நடிகர் விமல் தரமறுப்பதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கோபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்து நடிகர் விமல், தான் அந்த பணத்தை வாங்கவில்லை என்றும், சிங்கார வேலன்தான் பணத்தை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். சிங்காரவேலன் பணத்தை கோபிக்கு தராமல் தன்னை கைக்காட்டியுள்ளதாக கூறிய விமல், தான் ஒவ்வொரு படம் கமிட் ஆகும்போதும் சிங்காரவேலன் தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே தான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறியுள்ள விமல் தான் எந்த மோசடியும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
