சின்ன புள்ளைங்க ரைம்ஸ் மாதிரி இருக்கு! –  ஆரம்பக்கட்டத்தில் ஏ.ஆர் ரகுமானை கலாய்த்த விவேக்

சினிமாவில் ஏ.ஆர் ரகுமானுக்கு முன்பே விவேக் அறிமுகமாகிவிட்டார். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும்போது ஏற்கனவே ஒரு நகைச்சுவையாளராக விவேக் பிரபலமடைந்திருந்தார்.

ஒரு பேட்டி ஒன்றில் விவேக் ஏ.ஆர் ரகுமான் குறித்து பேசியிருந்தார். அதில் விவேக் கூறும்போது முதன் முதலாக ஏ.ஆர் ரகுமான் இசையை பாலச்சந்தர் வழியாகதான் கேட்டேன் என கூறியுள்ளார்.

பாலச்சந்தரை ஒரு முறை சந்திக்கும்போது அவர் ஒரு புது இசையமைப்பாளர் திரைக்கு அறிமுகமாக இருக்கிறார் என கூறியுள்ளார். யார் அந்த இசையமைப்பாளர் என கேட்டுள்ளார் விவேக். உடனே பாலச்சந்தர் “முதலில் அவர் பாடலை கேள்” என கூறி ஒரு பாடலை போட்டு காட்டியுள்ளார்.

அதை கேட்ட விவேக் “இது என்ன குழந்தைகள் பாடும் ரைம்ஸ் பாடல் போல இருக்கு. ரொம்ப சிம்பிளா இருக்கு” என கூறியுள்ளார். உடனே பாலச்சந்தர் சிம்பிளா இருக்குல அப்ப இது நல்ல ஹிட் கொடுக்கும் என கூறியுள்ளார்.

அதே போல அந்த பாடலும் நல்ல ஹிட் கொடுத்துள்ளது. அதுதான் ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடல். இந்த நிகழ்வை விவேக் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Refresh