வா ரெண்டு பேரும் சேர்ந்து பீர போடுவோம்! –  விவேக்கை அழைத்த மனோபாலா! – கப்பலில் நடந்த சம்பவம்!

நகைச்சுவை நடிகர் விவேக்கும் நடிகர் மனோபாலாவும் வெகுநாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறலாம். படப்பிடிப்பு தளங்களில் இவர்கள் இருவரும் மிகவும் ஜாலியாக இருக்க கூடியவர்கள்.

அதை குறித்த நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் விவேக். கவுதம் கார்த்திக் நடித்து வை ராஜா வை என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படம் முழுக்கவே கதாநாயகனுடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாக இந்த கதாபாத்திரம் இருக்கும்.

வை ராஜா வை படத்தில் ஒரு பெரும் கப்பலில் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன. அப்போது அங்கு விவேக் மனோபாலா இருவருமே இருந்தனர். இவ்வளவு பெரிய கப்பலில் எப்படிதான் படப்பிடிப்பை நிகழ்த்த போகிறோமோ என மிகவும் கவலையுடன் இயக்குனர் அமர்ந்திருக்கிறார்.

ஆனால் மனோபாலா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாராம். அவர் விவேக்கிடம் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே இந்த கப்பலில் எங்கு வேணாலும் அவங்க படப்பிடிப்பு செய்வாங்க. வாயேன் அதுக்குள்ள ரெண்டு பேரும் போய் ஒரு பீர் குடித்துவிட்டு வரலாம் என விவேக்கிடம் கூறியுள்ளார். படத்தின் இயக்குனரே கவலையில் இருக்கும்போது போய் பீர் குடித்துவிட்டு வரலாம் என கூப்பிடுகிறார் என நகைச்சுவையாக பேட்டியில் கூறியுள்ளார் விவேக்.