நயன்தாரா பட்டத்தை தவிர்க்க காரணமாக இருந்த நிகழ்வு..! இப்படி பண்ணிட்டாங்களே?.

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலோ என்னவோ அவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைத்து வந்தனர்.

இந்த பட்டம் அவருக்கு வெகு வருடங்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை துறந்துள்ளார் நயன்தாரா. இதுக்குறித்து அவர் கூறும்போது ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பின்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற கௌரவத்தை கொடுத்தீர்கள்.

ஆனால் அதை விடவும் என்னை நயன்தாரா என அழைப்பதையே நான் விரும்புகிறேன். அதுதான் என்னை மக்களுக்கு நெருக்கமாக நினைக்க வைக்கிறது என கூறியுள்ளார். என்னதான் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை கொண்டிருந்தாலும் கூட அது ஒரு பக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்தது.

பலரும் நயன் தாரா வேண்டும் என்றே தன்னுடைய திரைப்படங்களில் இப்படி போட்டு கொள்கிறார் என்று எல்லாம் கூறி வந்தனர். இதனால்தான் அந்த பட்டமே வேண்டாம் என்கிற முடிவை எடுத்துள்ளார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் அதே சமயம் தமிழில் பிரபல நடிகர்களான அஜித், கமல் மாதிரியான ஆட்கள் எல்லாம் தங்களது பட்டத்தை சமீபத்தில் துறந்தனர். இதனால்தான் நயன் தாரா இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.