இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் கண்ணாடி செல்ஃபி விட்ட த்ரிஷா.. எங்க தலக்கி தில்ல பாத்திங்களா!.

சமீபத்தில் நடிகை திரிஷா வெளியிட்ட ஒரு கண்ணாடி செல்ஃபி அதிக சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம். நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தார் திரிஷா.

அது இருவரும் லிப்டில் இருக்கும் புகைப்படமாக இருந்தது. அந்த புகைப்படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. த்ரிஷாவும் விஜய்யும் பல காலங்களாகவே காதலித்து வருவதாக ஒரு பேச்சுக்கள் திரைத்துறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திரும்ப த்ரிஷா சினிமாவுக்கு வந்த பிறகு அவருக்கு விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

லியோ திரைப்படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் இருந்தது விஜய்க்கும் திரிஷாவுக்கும் முத்த காட்சிகள் கூட இருந்தது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் மீண்டும் அந்த காதலை தூண்டி விட்டது என்று ஒரு பேச்சியிருந்தது.

திரிஷா புகைப்படம்:

இந்த நிலையில் திரிஷா வெளியிட்ட புகைப்படம் குறித்து சில பிரபலங்கள் சில கதைகளையும் கூற துவங்கினர். அதன்படி விஜயின் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் திரிஷாவும் தனக்கான அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

எனவே அடிக்கடி அவர் விஜய்யை சந்தித்து வருகிறார் என்று ஒரு பக்கம் பேச்சு இருந்தது. அதே போல விஜய்யின் வெற்றி கழகத்தில் திரிஷா இணைய உள்ளதாகவும் பேச்சுக்கள் எல்லாம் இருந்து வந்தன. இவ்வளவு சர்ச்சைகள் நடந்து வந்த போதிலும் திரிஷா இது குறித்து எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை.

சர்ச்சை:

பொதுவாகவே த்ரிஷா அவர் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை சமூக வலைதளங்களில் வருகிறது என்றால் அதற்கு உடனே பதில் அளிக்க கூடியவராக இருந்தார். ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அவர் எந்த ஒரு பதிலும் இதற்கு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கண்ணாடி செல்பியை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் திரிஷா. இதன் மூலமாக சாதாரணமாகவே கண்ணாடி செல்பி எடுப்பது தனக்கு ஒரு பழக்கமாக இருக்கிறது என்று மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருக்கிறார் திரிஷா.