தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலமான ஒரு சில நடிகைகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். இவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இவரது பெயரை சொன்னால் மக்கள் அறிந்திடும் வகையில் இவர் கொஞ்சம் பிரபலமாக தான் இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் யாஷிகா ஆனந்த் சினிமாவிற்கு வந்த போது அவர் தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாமே மோசமானதாக இருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது.
இருந்தாலும் எப்பொழுதும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.
அந்த கதாபாத்திரத்தை தொடர்ந்து அவருக்கு இப்பொழுது வாய்ப்புகளும் வரத் துவங்கியிருக்கின்றன இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.