பெரும் நடிகையாவதற்கு ஆசைப்பட்டேன்? – கனவுகளை இழந்த கதாநாயகிகள்!

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வருகிற அனைவருமே ஒரு பெரும் நட்சத்திரமாக மாற வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் எல்லோருக்கும் சினிமா அந்த வாய்ப்பை வழங்கி விடுவதில்லை. பலர் இருந்த சுவடே தெரியாமல் போனதும் உண்டு.

நடிகைகளை பொறுத்தவரையும் அதே கதைதான். சினிமாவிற்கு வரும்போது அக்காலக்கட்டத்தில் இருந்து பெரும் நடிகைகளை போல ஆவதற்கு ஆசைப்பட்டு இறுதியில் அப்படி ஆக முடியாமல் போன நடிகைகள் பலர், அதே போல எதிர்பாராமல் வாய்ப்பு கிடைத்து சினிமாவில் பெரும் பிரபலமான நடிகைகளும் உண்டு.

அப்படியாக தமிழ் சினிமாவில் பெரும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நடிகை சில்க் சுமிதா. நடிகை சாவித்திரி மாதிரி ஆக வேண்டும் என்பதுதான் சில்க் சுமிதாவின் மிகப்பெரும் கனவாக இருந்ததாம். ஏனெனில் அவர் வளர்ந்த காலக்கட்டங்களில் சினிமாவில் பெரும் கதாநாயகியாக இருந்தவர் சாவித்திரி.

பல படங்களில் சிறப்பாக நடித்தவர். எனவே அவரை போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் சில்க் சுமிதாவும் சினிமாவிற்கு வந்தார். ஆனால் அவரது ஆசை இறுதிவரை நிறைவேறவே இல்லை. இறுதிவரை தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி நடிகையாகவே இருந்தார் சில்க் சுமிதா.

அதே போல நடிகை மும்தாஜூம் ஸ்ரீ தேவி போல ஆக வேண்டும் என்னும் கனவோடுதான் திரைத்துறைக்கு வந்தார். இவர் ஸ்ரீ தேவி நடித்த மூன்றாம் பிறை படத்தை பலமுறை பார்த்துள்ளாராம். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார் ஸ்ரீ தேவி.

ஆனால் இவராலும் கூட இறுதிவரை ஸ்ரீ தேவியின் இடத்தை பிடிக்க முடியவில்லை.

Refresh