இந்த வாட்டி கண்டிப்பா ரிலீஸ் ஆகிரும்! ஆண்ட்ரியாவின் ‘கா’ திரைப்பட வெளியீடு தேதி இது தான்!

தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா மிரட்டும் ‘கா’ திரைப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டே வெளியானது. இயக்குநர் நாஞ்சில் இயக்கும் இந்த கா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

முழுக்க முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சலீம் ஹவுஸ், புகழ் கமலேஷ், ‘சூப்பர் டீலக்ஸ்’ பட புகழ் நவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தைப் பெற்ற நிலையில், கடந்த 2022  ஏப்ரல் மாதமே  திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். இதன் பஸ்ட் லுக் 2018 ஆண்டே வெளியானது குறிப்பிட தக்கது. 

இந்த நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் வெளிவராத இந்த கா திரைப்படம் ஒருவழியாக மீண்டும் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 

பல ஆண்டுகளாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் அதிரடி காட்சிகள் நிறைந்த ஆண்ட்ரியாவின் இந்த  கா திரைப்படம் தற்போது மீண்டும் ரசிகர்களிடையே ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது.