ஒரு நாய்க்காக படுத்தி எடுத்துட்டார்… ஏ.ஆர் முருகதாஸ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர் முருகதாஸ். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் முதல் திரைப்படமான தீனா திரைப்படம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.

இந்த படம் நடிகர் அஜித்துக்கும் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா, கஜினி மாதிரியான எல்லா திரைப்படமும் தமிழில் பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் ஆகும்.

தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படம் இயக்கி வரும் ஏ.ஆர் முருகதாஸ் தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். தர்பார் திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸுக்கு பெரிதாக திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்:

ஏனெனில் தர்பார் திரைப்படம் பெரிய தோல்வியை பெற்றுக் கொடுத்தது அதற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்படம் தான் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்து விட்டால் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வெற்றியை கொடுத்த இன்னொரு திரைப்படம் ஸ்பைடர். இந்த திரைப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். மகேஷ்பாபு நடித்த முதல் தமிழ் திரைப்படம் ஸ்பைடர் திரைப்படமாகும்.

ஆர்.ஜே பாலாஜி சொன்ன விஷயம்:

இந்த திரைப்படத்தில் காமெடியனாக நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடித்திருந்தார் அந்த அனுபவத்தை ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அதில் ஆர்.ஜே பாலாஜி கூறும் பொழுது படப்பிடிப்பு நடக்கும் பொழுது சின்ன சின்ன இடையூறுகளை கூட ஏ.ஆர் முருகதாஸ் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

ஒரே வசனத்தை நாங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் கூற வேண்டி இருந்தது. அப்பொழுது ஒரு வசனத்தை நான் தவறாக கூறியதால் திரும்பவும் அந்த காட்சி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்பொழுது தூரத்தில் ஒரு நாய் கத்தும் சத்தம் கேட்டது.

spyder

நான் அப்பொழுது உதவி இயக்குனரை அழைத்து அந்த நாயை விரட்ட சொல்லுங்கள் இல்லையென்றால் அதை ஒரு டிஸ்டர்பன்ஸ் ஆக நினைத்து மீண்டும் அந்த காட்சியை இயக்குமர் படம்பிடிப்பார் என்று கூறினேன். ஆனால் உதவி இயக்குனர் சிரித்துக்கொண்டே அந்த அளவிற்கு அவர் மோசம் கிடையாது தூரத்தில் குழைக்கும் நாயை போய் கண்டுக்கொள்வாரா என்று கூறிவிட்டு சென்றார்.

அதே மாதிரி திரும்பவும் அந்த காட்சி எடுக்கப்பட்ட பொழுது நாயின் சத்தம் கேட்டதும் கோபமடைந்த ஏ.ஆர் முருகதாஸ் உடனே அந்த நாயை விரட்டுங்கள் என்று கூறினார் என்று ஏ.ஆர் முருகதாஸின் படப்பிடிப்பு குறித்து பேசி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.