News
லெஜண்ட் ஓ.டி.டில வராது – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சரவணா
3 மாதங்களுக்கு முன்பு அருள் சரவணா நடித்து வெளியான திரைப்படம் லெஜண்ட். இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் அருள் சரவணாவிற்கு முதல் படம் என்பதால் பல்வேறு விமர்சனங்களையும் அதே சமயம் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் பார்க்காத பலரும் ஒ.டி.டியில் பார்த்துக்கொள்ளலாம் என யோசனையில் இருந்தனர். ஆனால் லெஜண்ட் படத்தை ஓ.டி.டியில் விடுவதாக இல்லை என அருள் சரவணன் தரப்பினர் கூறியுள்ளனர். எனவே திரையரங்கில் பார்க்காதவர்களால் இனி படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்களிடையே லெஜண்ட் திரைப்படம் குறித்து ஏற்பட்ட எதிர்மறையான கருத்துக்களால்தான் லெஜண்ட் ஓ.டி.டியில் வரவில்லை என ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர்.
