Connect with us

காத்திருந்த ரசிகர்களுக்கு நற்செய்தி? – ஓ.டி.டி யில் வெளியாக இருக்கிறது லெஜண்ட்!

News

காத்திருந்த ரசிகர்களுக்கு நற்செய்தி? – ஓ.டி.டி யில் வெளியாக இருக்கிறது லெஜண்ட்!

Social Media Bar

சென்னையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் முதலாளியான அருள் சரவணன் நடித்த படம் லெஜண்ட். 

இந்த படம் முண்ணனி நடிகர்களை வைத்து மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் கோடி கணக்கில் செலவு செய்திருந்தார் அருள் சரவணன்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 28 அன்று அவர் நடித்த லெஜண்ட் படம் வெளியானது. அதிகமான திரையரங்குகளை பிடித்து கொஞ்சம் பிரமாண்டமாகவே படத்தை வெளியிட்டார் அருள் சரவணன்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. படத்தின் தயாரிப்பு செலவுக்கு ஆன காசே வரவில்லை. இதையெல்லாம் தாண்டி படம் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் விரக்தியடைந்த அருள் சரவணன் படத்தை ஓ.டி.டியில் வெளியிட வேண்டாம் என்ற நிலையில் இருந்தார்.

ஏனெனில் படம் ஓ.டி.டியில் வெளியானால் அவரது வீடியோக்களை வைத்து மக்கள் ட்ரோல் செய்வார்கள் என அவர் ஐயப்பட்டிருக்கலாம். ஆனால் லெஜண்ட் படத்தை பார்க்க வேண்டும் என ஒரு ரசிக கூட்டம் உருவாகி இருந்தது. அவர்கள் தொடர்ந்து லெஜண்ட் எப்போது வரும் என ஆவலாக காத்திருக்க படம் மட்டும் இத்தனை மாதமாகியும் ஓ.டி.டியில் வெளிவரவே இல்லை.

இந்த நிலையில் லெஜண்ட் திரைப்படம் ஓ.டி.டியில் வெளிவர இருப்பதாக நம்ப தகுந்த தகவல்கள் வந்துள்ளன. இதனால் லெஜண்ட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எந்தவொரு நடிகரும் முதல் படத்திலேயே சிறப்பாக நடிப்பதில்லை. அதே போல முதல் படத்தில் ஒரு நடிகர் விமர்சனம் பெறுவது என்பது எப்போதும் நடப்பதுதான் என்பதால் அதை தாண்டி வந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளார் லெஜண்ட்.

முதல் படத்தில் சயிண்டிஸ்டாக அறிமுகமான நிலையில் இரண்டாம் படத்தில் சூப்பர் ஹீரோவாக வருகிறார் என கூறப்படுகிறது.

Bigg Boss Update

To Top