Connect with us

விரைவில் ஓ.டி.டியில் லெஜண்ட்! – அறிவித்த அண்ணாச்சி!

legend

News

விரைவில் ஓ.டி.டியில் லெஜண்ட்! – அறிவித்த அண்ணாச்சி!

Social Media Bar

கடந்த வருடம் ஜூலை 28 ஆம் தேதி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான அருள் சரவணன் நடித்த லெஜண்ட் படம் வெளியானது.

அவருக்கு இது முதல் படம் என்றாலும் கூட மாபெரும் பொருட் செலவில் படத்தை தயாரித்திருந்தார். ஆனால் படம் வெளியான பிறகு குறைவான அளவிலேயே வசூல் செய்தது.

பலரும் படத்தை ஓ.டி.டியில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் படம் ஓடவில்லை என்பதால் அதை ஓ.டி.டிக்கும் தரவில்லை அருள் சரவணன்.

இதனால் திரை ரசிகர்கள் பலரும் கவலையுற்றனர். பேசாமல் திரையரங்குகளுக்கு சென்று பார்த்திருக்கலாம் என நினைத்தனர். ஆனாலும் டிசம்பர் மாதத்தில் இதுக்குறித்து அரசல் புரசலான செய்திகள் வந்தன.

அதாவது லெஜண்ட் திரைப்படம் ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டதாகவும் நியூ இயருக்கு வெளியாவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படியும் கூட எந்த நிகழ்வும் நடக்கவில்லை. இந்த நிலையில் இவர் தனது டிவிட்டர் பகுதியில் லெஜண்ட் திரைப்படம் விரைவில் ஓ.டி.டியில் வரும் என கூறியுள்ளார்.

இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அநேகமாக படம் பொங்கலுக்கு ஓ.டி.டியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top