ஆண்டவருக்கு அடுத்து நம்ம லெஜண்டுதான்..! – என்ன பண்ணிருக்கார் பாருங்க!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் “லெஜெண்ட்”.

Legend

இந்த படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை தயாரிக்கும் ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். இந்த படத்தில் விவேக் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் “லெஜண்ட்” படத்தின் “மொசலோ மொசலு” முதல் சிங்கிள் பாடல் வெளியானது. இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் நம்ம லெஜண்ட் சரவணன்.

Legend

இந்த ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 29ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பல்வேறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வெளியிட உள்ளார்கள். இதற்காக சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்கள், நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் பிரம்மாண்டமாக நடக்காத நிலையில் சமீபத்தில்தான் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அதற்கு பிறகு அதே ஸ்டேடியத்தில் அதே பிரம்மாண்டத்தில் சரவணன் அண்ணாச்சி “லெஜெண்ட்” ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளார்.

Refresh