முதல் படத்துக்கு இது அதிகம்தான் – லெஜண்ட் படத்தின் ஒரு வார வசூல் நிலவரம்.!

தொழிலதிபர்கள் பலரும் பொருளாதார ரீதியாக பிரபலங்களாக இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அவ்வளவிற்கு பிரபலமாக இருப்பதில்லை. பல தொழிலதிபர்களுக்கும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. அப்படியாக சிலர் விளம்பரங்களின் மூலம் தங்களது முகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக்கொள்கின்றனர். 

Legend

ஆச்சி மசாலா, லலிதா ஜுவல்லரி போன்ற விளம்பரங்களில் அதன் உரிமையாளர்களே நடிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி விளம்பரம் வழியாக வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆகி இருப்பவர்தான் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன்.

சில நாட்களுக்கு முன்பு இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் வெளியானது. பலரும் இந்த படத்தை கேலி செய்து விமர்சனம் செய்து வந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு இந்த படம் கவனத்தை ஈர்த்தது என்றே கூறலாம்.

இந்த படத்தை ஜெடி – ஜெரி இயக்கியுள்ளார்.

Legend

படத்தில் கதாநாயகனுக்கு ஜோடியாக கீர்த்திகா டிவார் என்னும் நடிகை நடித்துள்ளார். ஏக போக ப்ரமோஷன்களுக்கு பிறகு இந்த பேன் இண்டியா அளவில் வெளியானது.

வெளியான ஒரு வாரத்தில் இதுவரை 7.7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பெரிய பெரிய கதாநாயகர்களே தங்களது முதல் படத்தில் பெரிதாக வசூல் சாதனை செய்து விடவில்லை என்பதால் லெஜண்ட் திரைப்படத்திற்கு இது ஒரு நல்ல வசூல் என்றே கூறலாம்.

இந்த படத்தில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இவர் நடித்துள்ளார். இதையடுத்து அடுத்து சூப்பர் ஹீரோவாக ஒரு திரைப்படம் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் திரையில் தோன்ற வேண்டும் என்கிற தன்னுடைய பல நாள் கனவை நிறைவேற்றி கொண்டார் அருள் சரவணன்.

Refresh