News
”லெஜண்ட்” வாடி வாசல் பாடல் ! எப்போ ரிலீஸ் தெரியுமா ?
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜண்ட் சரவணா தயாரித்து, நடித்து வரும் திரைப்படம்தான் லெஜண்ட்.
ஜெர்ரி மற்றும் ஜோசப் என்ற இருவரும் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தற்சமயம் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரைப்படம் இந்திய அளவில் வெளியாக உள்ளது.
இந்த படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தாலும் படத்தின் பாடல்கள் நன்றாக இருக்குமென ஹாரிஸ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். அதற்கேற்றாற் போல ஏற்கனவே வெளியான மொசலோ மொசலு என்கிற பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான வாடிவாசல் என்கிற பாடல் நாளை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
