பெரிய பெரிய கதாநாயகர்களே இவர மாதிரிதான் நடிச்சாங்க – லெஜண்ட் குறித்து பேசிய லிவிங்ஸ்டன்

சினிமா என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு துறையாகும். பலருக்கும் சினிமாவில் தனது காலடி தடத்தை பதிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே உண்டு. ஆனால் அவ்வளவு எளிதில் அனைவருக்கும் அது நிகழ்ந்துவிடுவதில்லை.

தற்சமயம் பெரிய நாயகர்களாக இருக்கும் பலரும் கூட வெகு காலங்கள் சினிமாவில் முயற்சி செய்து படத்திற்காக காத்திருந்து தற்சமயம் பெரும் இடத்தை பிடித்தவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் அருள் சரவணன் நடித்து வெளியான லெஜண்ட் திரைப்படம் அதிகமான மக்களால் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் இந்த படத்தில் பெரும் நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.

விவேக், லிவிங்ஸ்டன், ராய் லெட்சுமி, பிரபு, நாசர் போன்ற பெரும் நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர். 

இந்த படம் குறித்த அனுபவத்தை லிவிங்ஸ்டன் அவர்கள் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அப்போது லெஜண்ட் படம் குறித்து மக்கள் பலவிதமாக பேசுகிறார்களே அதுக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு லிவிங்ஸ்டன் கூறும்போது “யாரும் எடுத்த எடுப்பில் ஹீரோ ஆகிவிடவில்லை, பலரும் முதல் படத்தின் போது மக்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்றவர்களே. நடிகர் விஜய், தனுஷ், விஷால் போன்ற பெரும் நடிகர்களே தங்களது முதல் படத்தின் போது மக்களிடம் எதிர்மறையான விமர்சனத்தையே பெற்றனர். கண்டிப்பாக போக போக அருள் சரவணா நடிப்பார் என கூறியிருந்தார்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh