Hollywood Cinema news
நாம எப்ப சாக போறோம்னு காட்டும் செயலி – கவுண்டவுன் திரைப்பட விமர்சனம்
சாகுற நாள் தெரிந்துவிட்டால் வாழ்கிற நாள் நரகமாயிடும் என்கிற வசனத்தை நாம் கேட்டிருப்போம். அப்படி சாகும் நாள் தெரிந்துவிட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். அப்படி ஒரு கற்பனை கதைதான் இந்த கவுண்டவுன்.

படத்தில் முதல் காட்சியில் ஒரு பெண்களின் குழு இந்த கவுண்டவுன் என்கிற ஆப்பை இன்ஸ்டால் செய்கிறார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் எந்த வயதில் சாக போகிறார்கள் என்பதை காட்டுகிறது. அப்பொழுது ஒரு பெண்ணுக்கு மட்டும் இன்னும் 3 மணி நேரத்தில் சாக போகிறீர்கள் என காட்டுகிறது.
இதையடுத்து அந்த பெண் தனது காதலனுடன் காரில் செல்ல தயாராகிறாள். ஆனால் அப்பொழுது அந்த காதலன் மிகவும் போதையில் இருக்கிறான். எனவே அந்த பெண் காரில் ஏறாமல் நடந்தே வீட்டிற்கு செல்கிறாள். இந்த சமயத்தில் அவளது மொபைலில் ஒப்பந்தம் மீறப்பட்டது என்று வருகிறது. பிறகு அவள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள்.

அதன் பிறகு அதே ஆப்பை குயின் ஹாரிஸ் என்கிற பெண்மணி இன்ஸ்டால் செய்கிறாள் அவளுக்கு இன்னும் சில தினங்களில் அவள் சாக போவதாக காட்டுகிறது. அதில் இருந்து அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதே கதை.
கதைப்படி ஒவ்வொரு மனிதனும் எப்போது சாக போகிறார் என்பதை அந்த ஆப் காட்டுகிறது. ஆனால் அந்த சாவு நிகழும் சந்தர்ப்பத்தில் இருந்து அவர்கள் தப்பித்துவிட்டார்கள் எனில் அப்போது ஒரு அமானுஷ்ய உருவம் வந்து சாவு நிகழ வேண்டிய நேரத்தில் அந்த மனிதர்களை சாகடிக்கிறது.
படத்தை முழுக்க முழுக்க ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகவே கொண்டு சென்றிருந்தனர்.
அதற்கு தகுந்தாற் போல சத்தங்களும் அமைந்திருந்தன. மர்மமான காட்சிகள் வரும் வேளையில் எந்த சத்தமும் கேட்காமல் பிறகு திடீர் என சத்தத்தை ஏற்படுத்தி பயமுறுத்தும் ட்ரிக்கை பின்பற்றி இருந்தனர்.
மொத்தத்தில் விறு விறுப்பான ஒரு திரைப்படம் இந்த கவுண்டவுன்
