நீங்கள்லாம் நடிச்சா படம் ஓடும்னு நம்புறீங்களா? –  நடிகர் வைபவை கலாய்த்த கும்பல்..!

முன்பெல்லாம் பேய் படம் என்றால் நம்மை பயமுறுத்தும் காட்சிகளை அதிகமாக வைத்து பயமுறுத்தும் படங்களாக எடுக்கப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே நகைச்சுவையான பேய் படங்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

ஏற்கனவே தில்லுக்கு துட்டு மாதிரியான வகையில் பல பேய் படங்கள் வந்து அவை பலவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தற்சமயம் அந்த வகையில் வந்த மற்றொரு காமெடி ஹாரர் திரைப்படம்தான் காட்டேரி.

இந்த படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஆத்மிகா, கருணாகரன், ரவி மர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். தீகே என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமானது யு ட்யூப் வழியாக படத்தை ப்ரோமோட் செய்வதற்கு ஒரு வித்தியாசமான வழிமுறையை பின்பற்றியது.

யு ட்யூப்பில் பிரபல ப்ராங் சேனல் ஒன்றில் பேசி அவர்களை வைத்து வைபவ் மற்றும் கருணாகரன் இருவரையும் ப்ராங் செய்வதற்கு ஏற்பாடு செய்தது ஸ்டுடியோ க்ரீன்.

அதன்படி ஒரு பட இண்டர்வீவ் மாதிரியாக ஆரம்பித்த இந்த ஷோவில், அந்த கும்பல் வைபவிடம் தாறுமாறாக கேள்விகள் கேட்க இறுதியில் அந்த நிகழ்வு கை கலப்பில் முடிந்தது.

See also  விஜய் ஒரு நல்ல படமாவது நடிச்சா தேவலாம் - அதிர்ச்சி தகவல் அளித்த கமல்

பிறகு அந்த ப்ராங் செய்யும் குழு தாங்கள் ப்ராங் செய்ய வந்திருப்பதை கூறி நிகழ்வை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்வானது காட்டேறி திரைப்படத்திற்கு ஒரு நல்ல ப்ரோமோஷனாக அமைந்தது.

See also  வரவேற்பை பெரும் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் - டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ்

தற்சமயம் படங்களை ப்ரோமோட் செய்வதற்கு ஒரு எளிய தளமாக யூ ட்யூப் அமைந்துள்ளது. வரும் காலங்களில் பல படங்கள் யு ட்யூப் சேனல்களை கொண்டே ப்ரோமோட் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.