ஆத்தாடி எவ்ளோ முடி – மேகா ஆகாஷின் கலக்கும் புகைப்படங்கள்

தமிழில் குறைவான அளவிலே படங்கள் நடித்திருந்த போதும் மக்களிடம் அதிகமாக பரவிய ஒரு முகம் மேகா ஆகாஷ். தமிழ் திரையுலகிற்கு வந்து சில மாதங்களிலேயே அதிகமான ரசிகர்களை பிடித்தவர். ஆனால் எந்த அளவிற்கு வெகுவாக பிரபலமானாரோ அதே அளவில் சரிவை கண்டார் மேகா ஆகாஷ். இவர் தமிழில் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் யாவுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். மேலும் துவக்கத்திலேயே இவர் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் வரிசையாக நடித்தார்.

See also  பார்ப்பவரை மதி மயக்கும் யாஷிகா ஆனந்தின் நீச்சல் உடை போட்டோக்கள்

அதற்கு பிறகு இவரை தமிழ் சினிமாவில் அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனாலும் தென்னிந்திய மொழிகளில் உள்ள மற்ற படங்களில் இவர் நடித்துக்கொண்டுத்தான் இருந்தார். இருந்தாலும் அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிடுவது மூலம் இவர் இன்னும் பிரபலமாகவே உள்ளார்.

தற்சமயம் புதிதாக ஒரு உடையில் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெண்களே அவரை பார்த்து பொறாமை படும் வண்ணம் நீளமான கூந்தலை கொண்டவர் மேகா ஆகாஷ். இயற்கையிலேயே அடர்த்தியான நீளமான கூந்தலை இவர் கொண்டுள்ளார். மிகவும் அழகான இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.