சிவகார்த்திகேயனை யாருன்னே தெரியாது என சொன்ன மிஸ்கின் – இப்ப நிலைமையே மாறிடுச்சி

சினிமாவை பொறுத்தவரை உயர்வு தாழ்வு என்பது இருந்துக்கொண்டே இருக்கும். எப்போதும் ஒரு நடிகரால் வெற்றி படம் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது. அதே போல எப்போதும் ஒரு நாயகன் தோல்வியையே காண்பது கிடையாது.

2014 ஆம் ஆண்டு காபி வித் டிடி என்னும் விஜய் டிவி நிகழ்ச்சியில் இயக்குனர் மிஸ்கின் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒவ்வொரு நாயகர்கள் பெயரை சொல்ல சொல்ல அதற்கு மிஸ்கின் அவருக்கு தோன்றும் பதிலை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் இன்னும் பல்வேறு நடிகர்கள் பெயர்கள் கூறப்பட்டது. அதற்கு மிஸ்கினும் பதில் அளித்து வந்தார். அப்போது சிவகார்த்திகேயன் பெயரை சொல்லும்போது “யார் சிவகார்த்திகேயன் எனக்கு தெரியாது” என கூறினார் மிஸ்கின்.

அந்த சமயத்திலேயே சிவகார்த்திகேயன் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் மிஸ்கின் கூறும்போது எனக்கு சிவகார்த்திகேயனை தெரியாது என்றே கூறினார்.

பல தோல்விகள், பண நெருக்கடி என பல விஷயங்களை கண்டபோதும் சிவகார்த்திகேயன் தற்சமயம் சினி துறையில் வளர்ச்சியை கண்டு வருகிறார். பெரும் ரஜினி ரசிகரான இவர் தனது பாணியில் நடிகர் ரஜினிகாந்தை போல பல விஷயங்களை செய்வதை நாம் பார்க்கலாம்.

அந்த வகையில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த மாவீரன் படத்தின் பெயரை கொண்டு சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

கிட்டத்தட்ட இந்த படத்தில் ரஜினியை போலவே இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஸ்கின் நடிக்கிறார். ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் யார் என கேட்ட மிஸ்கினே தற்சமயம் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார், அதுதான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Refresh