கடலுக்கு அடியில் அஜித்துக்கு பேனர் வைத்த ரசிகர்கள்

சினிமா துவங்கிய காலம் முதலே ரசிகர்களிடையேயான போட்டி என்பதும் துவங்கிவிட்டது. முதலில் சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என துவங்கிய இந்த போட்டி ரஜினி, கமலுக்கு பிறகு இப்போது விஜய் , அஜித் பிரச்சனையாக மாறி நிற்கிறது.

நடிகர் அஜித் நிஜ வாழ்க்கையில் ஒரு கார் ரேஷர், துப்பாக்கி சுட தெரிந்தவர் என பல விஷயங்களில் திறமையானவராக இருப்பதால் ரசிகர்கள் பலரும் அவரை நிஜமான கதாநாயகர்களாகவே பார்க்கின்றனர். மேலும் சினி உலகில் இவர் மிகவும் கருணைமிகுந்த நபர் என பேசப்படுகிறது. பலருக்கும் உதவி செய்யக்கூடிய ஆள் அஜித்குமார் என்கிற பெயர் அவருக்குண்டு.

இந்த காரணங்களால் நடிகர் அஜித் அதிகமான ரசிகர்களை பெற்று வருகிறார்.

நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. எனவே இதை கொண்டாடுவதற்காக அஜித் ரசிகர்கள் ஸ்கூபா டைவிங் செய்து கடலில் நூறு அடி ஆழத்திற்கு சென்று அங்கு நடிகர் அஜித்திற்கு பேனர் வைத்துள்ளனர். நூறு அடி ஆழத்திற்கு கீழ் ஒரு நடிகருக்கு பேனர் வைப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

Refresh