Karuppu movie: இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் கருப்பு. கருப்பு திரைப்படத்தின் கதை குறித்து பெரிதாக தெரியவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் நீதி கேட்டு நடக்கும் கதைதான் என பலருக்கும் தெரிந்திருக்கும்.
படத்தின் கதை:
படத்தின் கதைப்படி தனது மகளின் மருத்துவத்திற்காக இந்திரன்ஸ் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார். வந்த இடத்தில் அவர் கொண்டு வந்த 60 பவுன் தங்க நகை திருடு போகிறது. எனவே போலிஸில் இதுக்குறித்து புகார் கொடுக்கிறார்.
போலீஸ் 45 பவுன் நகையை மட்டுமே மீட்டு தருகிறது. அதையும் நீதிமன்றம் வாயிலாகதான் வாங்கி கொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார் இந்திரன்ஸ். அங்கே அவருக்காக இந்த வழக்கை ஆர்.ஜே பாலாஜி எடுக்கிறார்.

ஆனால் ஆர்.ஜே பாலாஜியுமே 4 மாதங்களாக வழக்கை இழுத்தடிக்கிறாரே தவிர வழக்கை முடித்து வைக்க மாட்டேன் என்கிறார். இதுக்குறித்து கேள்வி கேட்ட இந்திரன்ஸை அடிக்கும் ஆர்.ஜே பாலாஜி என்னை தாண்டி எப்படி இந்த வழக்கை நடந்துரேன்னு பாக்குறேன் என கூறுகிறார்.
மனம் வெறுத்த இந்திரன்ஸ் கருப்பசாமியை வேண்டி மிளகாய் அரைத்து கருப்பசாமிக்கு பூசுகிறார். இதனால் எழுந்த வேட்டை கருப்பு (சூர்யா) ஆர்.ஜே பாலாஜியை தண்டிக்க செல்கிறார். இதற்காக என்னை கொல்வது எப்படி சரியாகும். முடிந்தால் இந்த நீதிமன்றத்தை மாற்றி காட்டுங்க என கூறுகிறார் ஆர்.ஜே பாலாஜி
இதனை தொடர்ந்து மனித உருவில் நீதிமன்றத்தில் களம் இறங்கும் வேட்டை கருப்பு என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் கதையாக உள்ளது. உண்மையிலேயே வெகு காலங்கள் கழித்து சூர்யாவுக்கு ஒரு ரீ எண்ட்ரி படமாக அமைந்துள்ளது.
ஆர்.ஜே பாலாஜியும், சூர்யாவும் ஒருவருக்கொருவர் டஃப் கொடுத்து படத்தில் நடித்துள்ளனர். முதல் நாளே அதிக வரவேற்பை பெற்றுள்ளது கருப்பு திரைப்படம்.







