அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

Tamil Cinema News

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிரூத். தொடர்ந்து தமிழில் டாப் நடிகர்களாக இருந்து வரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் மாதிரியான நடிகர்களுக்குதான் இசையமைத்து வருகிறார்.

ஒரு திரைப்படத்திற்கு இவர் எட்டில் இருந்து 10 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சாய் அபயங்கர் இப்போது தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கியுள்ளார்.

அவர் இசையமைத்த டூட், கருப்பு ஆகிய இரு படங்களின் பாடல்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. மேலும் இவர் அனிரூத்தை விடவும் குறைவாக சம்பளம் வாங்குவதால் நிறைய தயாரிப்பாளர்களை சாய் அபயங்கரையே இசையமைக்க அணுகுகின்றனர்.

ஆனால் தொடர்ந்து தனது பாடல்கள் ஹிட் கொடுத்து வருவதால் சாய் அபயங்கருமே சம்பளத்தை அதிகரித்து வருகிறாராம். ஓம் திரைப்படத்திற்கு பிறகு சாய் அபயங்கர் புதிதாக இசையமைக்கும் படங்களுக்கு 6  கோடி வரை சம்பளமாக வாங்க இருக்கிறாராம். எனவே இன்னும் சிறிது காலத்திலேயே இவர் அனிரூத்தின் சம்பளத்தை தொட்டு விடுவார் என பேச்சுக்கள் இருக்கின்றன