lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி, வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் 10.04.2026 அன்று திரையரங்குகளில் வெளியான எல்.ஐ.கே தற்சமயம் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கிறது. படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை தரவில்லை என்றுதான் கூற வேண்டும். 2040 இல் நடப்பது போல எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதைக்களம் உண்மையிலேயே ஒரு நல்ல கதைக்களம் என்றுதான் கூற வேண்டும்.

2040களில் உலகமே மொபைலுக்கு அடிமையாகி இருந்து வருகின்றன. இந்த நிலையில் ரீல்ஸ் போட்டு லைக்ஸ் வாங்க கூடிய ஒரு மிகப்பெரிய செல்போன் அடிமையாக கதாநாயகி தீமா இருந்து வருகிறாள். ஆனால் அந்த காலக்கட்டத்திலேயும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகாத ஒரு நபராக இருக்கிறார் கதாநாயகன்.

இவர்களுக்குள் ஏற்படும் காதல், அந்த காதலுக்கு எதிரியாக வரும் எல்.ஐ.கே என்கிற ஆப். அந்த ஆப்பை ஒழிக்க கதாநாயகன் முன்னெடுக்கும் விஷயங்கள் இப்படிதான் இதன் கதை அம்சம் அமைந்துள்ளது. கதையாக கேட்க நன்றாக இருந்தாலும் படமாக சுமாராக தெரிகிறது எல்.ஐ.கே திரைப்படம்.

கேரக்டர் பிடித்து காதல் வருவது, புரிதலால் காதல் வருவது என்றெல்லாம் தமிழ் சினிமா ட்ராக் மாறி கொண்டிருக்கும்போது மீண்டும் கண்டவுடன் காதல் என்கிற பழைய கான்செப்டை தூக்கி கொண்டு வருகிறது திரைப்படம்.

கதாநாயகியின் அழகில் மயங்கி நாயகன் அவளை காதலிக்கிறான். அதை தவிர்த்து அந்த காதலுக்கே நியாயமான காரணங்கள் இல்லை. பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் அவள்தான் வேண்டும் என அடம்பிடிப்பவனாக கதாநாயகன் இருக்கிறான். க்ளைமேக்ஸில் கூட அவனுக்கு சண்டை போட தெரியவில்லை என பயந்து அவனை விட்டு செல்ல நினைக்கிறாள் கதாநாயகி. ஆனால் தான் வீராதி வீரன் என நிரூபித்து அந்த காலத்தில் காளையை அடக்கி பெண்ணை கரம்பிடிக்கும் அதே அறுந்த பழைய டெக்னிக்குகளை கொண்டு வந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

பிரேமலு, குட் நைட், வித் லவ் மாதிரியான படங்களில் உணர்ந்த அளவுக்கு இந்த படத்தில் காதலை உணர முடியாத ஒரு காதல் படமாக எல்.ஐ.கே அமைந்துவிட்டது. ஆக பெரிய பட்ஜெட் லவ் படமாக இருந்தாலும் சுமாரான படமாக அமைந்துள்ளது எல்.ஐ.கே.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.